`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி!’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு

`வாலு', 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படங்களில் பல சர்ச்சைகளில் இருந்தாலும் தமிழ் சினிமாவில் மவுசு குறையாத ஹீரோவாக இருந்து வருகிறார் சிம்பு. பல புகார்கள் இருந்தாலும் தொடர்ந்து பல முன்னணி இயக்குநர்களின் படங்கள் அவரைத் தேடி வருவதும் குறிப்பிடத்தக்கது. மணிரத்னம் இயக்கியுள்ள 'செக்க சிவந்த வானம்' படத்தைத் தொடர்ந்து சிம்பு, கௌதம் மேனன், வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். தற்போது தங்கள் நிறுவனத்துக்கு சுந்தர்.சி இயக்கவுள்ள படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சுந்தர் சி - சிம்பு

தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து  2013-ல் வெளியான  'அத்தாரின்டிக்கி தாரெடி' படத்தின் ரீமேக்கை சுந்தர் சி இயக்கவுள்ளதாகவும் பவன் கல்யாணின் அதிரடி கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க வைக்க 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'பூமராங்' படங்களில் நடித்து வரும் மேகா ஆகாஷை ஒப்பந்தம் செய்யப் பேசி வருகின்றனர். படத்தின் இசைக்காக அனிருத்திடம் தயாரிப்பு நிறுவனம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேகா ஆகாஷ்

"2019 ஜனவரியில் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கும்" எனவும்  லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. அதிகாரபூர்வ செய்திகளுக்குக் கொஞ்ச நாள்கள் வெயிட் ப்ளீஸ். ஆக மொத்தத்தில் சிம்பு காட்டுல மழை அவரின் ரசிகர்கள் மனதில் மகிழ்ச்சி வெள்ளம் எனச் சொல்லலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!