'மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு ! | release date of merku thodarchi malai film is announced

வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (15/08/2018)

கடைசி தொடர்பு:08:20 (15/08/2018)

'மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

`வெண்ணிலா கபடி குழு', 'நான் மகான் அல்ல' படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்தவரும் அறிமுக இயக்குநருமான லெனின் பாரதி இயக்கத்தில் உருவான படம் 'மேற்குத் தொடர்ச்சி மலை'. இப்படத்தை விஜய் சேதுபதி தயாரித்துள்ளார். மேற்குத் தொடர்ச்சி மலை மீது வாழ்கின்ற நிலம் அற்ற உழைக்கும் மக்களின் கதை குறித்து படத்தில் பேசப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேற்குத் தொடர்ச்சி மலை படம்

படம் வெளியாகும் முன்னரே இப்படம் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை குவித்துள்ளது. "இது எளிய மக்களுக்கான படம். ஒரு அழகான வாழ்க்கை மூலமா, வாழ்வியல் மூலமா படம் சொல்லப்பட்டிருக்கிறது. படம் ரொம்ப அழகா வந்துருக்கு. என்ன பொறுத்தவரை இந்த மாதிரி ஒரு படம் பண்ணுனதுல ஆத்ம திருப்தியோட இருக்கேன். அதுக்கு லெனினுக்கு தான் நன்றி சொல்லனும். இந்தப் படத்தோட கதையை கேட்டு பணிபுரிய முன்வந்த இசைஞானி இளையராஜாவுக்கும் நன்றி" என படத்தின் புரொமோஷன் வீடியோவில் விஜய் சேதுபதி பேசியிருந்தார். இந்நிலையில், படம் ஆகஸ்ட் 24ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க