வெளியிடப்பட்ட நேரம்: 09:07 (15/08/2018)

கடைசி தொடர்பு:09:07 (15/08/2018)

சூர்யா படத்தில் இணைந்த மற்றொரு பாலிவுட் நடிகர் !

லைகா நிறுவனம் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் முதல் ஷெட்யூல் லண்டனில் நிறைவடைந்தது. அதில், அவருக்கு ஜோடியாக சாயீஷா நடித்து வருகிறார். மேலும், மோகன்லால், ஆர்யா, போமன் இரானி, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து, சிராக் ஜனி எனும் பாலிவுட் நடிகரும் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்.

சூர்யா படத்தில் சிராக் ஜனி

கிரிக்கெட் வீரரான இவர், பாலிவுட்டில் நடித்து வருகிறார். இவர் நடித்த 'டிராப்' படமும் 'போரஸ்' எனும் தொடரும் பார்த்த இயக்குநர் கே.வி.ஆனந்த் இந்தக் கதையில் அவரை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார். அல்லு சிரீஷ் இந்தப் படத்தில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, அந்தக் கேரக்டர்தான் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகி வரும் இப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியாக இருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க