வெளியிடப்பட்ட நேரம்: 22:36 (15/08/2018)

கடைசி தொடர்பு:22:36 (15/08/2018)

`தேசத்தின் வெளிச்சம் அதிகமாக விழ வேண்டும்' - கேரள மக்களுக்காக குரல்கொடுக்கும் சித்தார்த்!

கேரளா மீது ஊடக வெளிச்சம் அதிகமாக விழ வேண்டும். அங்கு மழையினால் அதிக சேதங்கள் ஏற்பட்டுள்ளது என நடிகர் சித்தார்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கேரள மழை

94 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பேரழிவு, 67 பேர் உயிரிழப்பு, 14 மாவட்டங்களிலும் அதிகமான பாதிப்பு என வெள்ளம் ஏற்படுத்திய சோகத்தில் மூழ்கியிருக்கிறது கேரள தேசம். ஆகஸ்ட் 9ம் தேதி தொடங்கிய கனமழை விடாமல் பெய்து வருவதால் நகரம், கிராமம் என அனைத்தும் பகுதிகளும் தீவுகளாக மாறியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. மாநில பேரிடர் அமைப்புக்கள், மத்திய பேரிடர் அமைப்புக்கள், ராணுவ வீரர்கள் என மீட்பு பணிகள் தீவிரமடைந்தாலும், மேலும் சில நாட்களுக்கு மழை பெய்யும் வெளியாகியுள்ள வானிலை மையத்தின் அறிவிப்பு கேரளா இயல்புநிலைக்கு திரும்ப மேலும் சில நாட்கள் ஆகும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. இதன் உச்சகட்டமாக இன்று ஒரே நாளில் மட்டும் 25 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டமைப்பது கடினமான பணியாக இருக்கும் என்பதால் நிவாரண பணிகளுக்கு அனைவரும் தாராளமாகப் பங்களிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சித்தார்த்

இந்நிலையில் இதே கோரிக்கையை நடிகர் சித்தார்த் எழுப்பியுள்ளார். கேரள மழை பாதிப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ``கடுமையான மழைப்பொழிவு, வெள்ளத்தால் கேரளா மிக மோசமான சூழ்நிலையில் உள்ளது.  கேரள மக்களுக்கு நிவாரணமும், ஆதரவும் உடனடியாக தேவைப்படுகிறது. இந்த விவகாரத்தில் தேசத்தின் வெளிச்சம் அதிகமாக விழ வேண்டும். தயவு செய்து இதில் அதிகமாக கூச்சலை எழுப்புங்கள்" என ஊடகங்களுக்கும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க