என்.டி.ஆர் பயோபிக்கில் மஞ்சிமா மோகன் ! | manjima mohan joins in ntr's biopic

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/08/2018)

கடைசி தொடர்பு:07:12 (16/08/2018)

என்.டி.ஆர் பயோபிக்கில் மஞ்சிமா மோகன் !

என்.டி.ஆர் பயோபிக்கில் மஞ்சிமா மோகன் நடிக்க கமிட்டாகியுள்ளார். மறைந்த நடிகரும் ஆந்திரா முதல்வராகவும் இருந்த என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டுவருகிறது. அதில், என்.டி.ஆர் கதாபாத்திரத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணாவும் அவரது மனைவியாக வித்யா பாலனும் நடித்துவருகின்றனர். மேலும், சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ், ஶ்ரீ தேவி வேடத்தில் ரகுல் ப்ரீத்சிங் உள்ளிட்ட பலர் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றனர். கிரிஷ் இயக்கிவரும் இப்படத்தை விப்ரி நிறுவனம் தயாரித்துவருகிறது.

மஞ்சிமா மோகன்

இப்படத்தில், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரான நடேந்தலா பாஸ்கர ராவ் வேடத்தில்  பரேஷ் ராவல் நடிக்க உள்ளார். என்.டி.ஆரின் மருமகனும், தற்போதைய ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கேரக்டரில் நடிக்க ராணா கமிட்டானதைத் தொடர்ந்து, அவர் மனைவி புவனேஷ்வரி வேடத்தில் நடிக்க மஞ்சிமா மோகன் ஒப்பந்தம்செய்யப்பட்டுள்ளார். 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் தெலுங்கு வெர்ஷனான ‘சாகசம் ஸ்வாசகா சகிக்கோ’ படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் தெலுங்குப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க