`இவ்வளவு நடந்தபிறகும் இது தேசியப் பேரிடர் இல்லையா?' - தேசிய ஊடகங்களைச் சாடும் ரசூல் பூக்குட்டி

இவ்வளவு நடந்த பிறகும் இது தேசியப் பேரிடர் இல்லையா எனத் தேசிய ஊடகங்களுக்கு ஆஸ்கர் விருது வென்ற சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

ரசூல் பூக்குட்டி

இயல்புநிலைக்குத் திரும்ப முடியாத அளவுக்கு திரும்பத் திரும்ப கேரளாவில் மழை பெய்து வருகிறது. இதனால் 94 பேர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரை விட்டுள்ளனர். 8 வது நாளாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அனைத்து மாவட்டங்களும் தீவுகளாக மாறி, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. பல பகுதிகளில் மக்கள் உணவின்றி தவிப்பதாகச் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. எனினும், மேலும் சில நாள்களுக்கு மழை பெய்யும் வானிலை மையம் அறிவித்துள்ளது கூடுதல் அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, கேரள மழை, வெள்ளத்தில் தேசிய ஊடங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஆஸ்கர் விருது வென்ற சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக கொச்சி விமானநிலையத்தைச் சுற்றி மழை நீர் தேங்கியுள்ள படங்களை ட்விட்டரில் பதிவிட்டு, ``எனதருமை தேசிய ஊடகங்களே, இதுதான் கொச்சி விமானநிலையத்தின் தற்போதையை நிலை. கேரள மழை, வெள்ளம் குறித்து உங்களுக்குத் தெரியுமா. இவ்வளவு நடந்த பிறகும் இது தேசியப் பேரிடர் இல்லையா என்னுடைய கேரள மக்களே இதை, சரிசெய்து சொல்கிறோம். ஜெய் ஹிந்த்!" எனப் கோபமாகப் பதிவிட்டுள்ளார்.  

முன்னதாக இதே கோரிக்கையை வலியுறுத்தி நடிகர் சித்தார்த் கருத்து பதிவிட்டார். அதில் ``கடுமையான மழைப்பொழிவு, வெள்ளத்தால் கேரளா மிக மோசமான சூழ்நிலையில் உள்ளது. கேரள மக்களுக்கு நிவாரணமும் ஆதரவும் உடனடியாகத் தேவைப்படுகிறது. இந்த விவகாரத்தில் தேசத்தின் வெளிச்சம் அதிகமாக விழ வேண்டும். தயவு செய்து இதில் அதிகமாக கூச்சலை எழுப்புங்கள்" எனத் தெரிவித்து குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தேசிய ஊடகங்கள் கேரள மழை, வெள்ளப் பாதிப்புகளைக் கண்டுகொள்வதில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!