பினராயி விஜயன், மோகன்லால் ஆகியோரை சந்தித்த கார்த்தி!

கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு மிகுந்த சேதமடைந்துள்ளது. அதை மீட்க பல்வேறு அமைப்பினர், பிரபலங்கள் எனப் பலர் நிதியுதவி வழங்கிவருகின்றனர். மேலும், தென்னிந்திய நடிகர் சங்கம் 5 லட்ச ரூபாயும், நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் 10 லட்சமும் நிதியுதவி வழங்கியுள்ளனர். நடிகர் சூர்யாவும் கார்த்தியும் சேர்ந்து கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு 25 லட்ச ரூபாய் நன்கொடை வழங்குவதாகக் கூறியிருந்தனர். 

கார்த்தி

இந்நிலையில், கேரளா சென்ற நடிகர் கார்த்தி, கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து நிவாரண நிதியை வழங்கினார். மேலும், மலையாள சினிமா சங்கமான அம்மாவுக்கு (Association of Malayala Movie Artists - AMMA) இது 25-வது ஆண்டு. மூத்த நடிகர்களின் ஓய்வு ஊதியத்திற்காக ரூபாய் 10 லட்சத்தை வழங்கினார், நடிகர் சூர்யா. அதை மலையாள சினிமா நடிகர் சங்கத் தலைவரும் நடிகருமான மோகன்லாலை சந்தித்து, அதற்கான காசோலையை சூர்யா சார்பாக வழங்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!