'செக்கச்சிவந்த வானம்' படத்தின் போஸ்டர் வெளியானது ! | poster of chekka chivandha vanam is released

வெளியிடப்பட்ட நேரம்: 06:40 (17/08/2018)

கடைசி தொடர்பு:06:57 (17/08/2018)

'செக்கச்சிவந்த வானம்' படத்தின் போஸ்டர் வெளியானது !

'காற்று வெளியிடை' படத்துக்குப் பிறகு இயக்குநர் மணி ரத்னம் இயக்கியிருக்கும் படம், 'செக்கச்சிவந்த வானம்'. மல்டி ஸ்டார் சப்ஜெக்டில் உருவாகியிருக்கும் இப்படத்தில் அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

செக்கச் சிவந்த வானம்

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வரதனாக அரவிந்த்சாமி, தியாகுவாக அருண் விஜய், ரசூலாக விஜய் சேதுபதி, எத்தியாக சிம்பு என அந்தந்த கதாபாத்திர பெயரோடு படத்தின் நான்கு ஹீரோக்களின் லுக்கும் அடுத்தடுத்த நாள்களில்  வெளியிட்டு வந்தது படக்குழு. இந்நிலையில், நால்வர் இருக்கும் போஸ்டரை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படம், செப்டம்பர் 28-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க