வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (18/08/2018)

கடைசி தொடர்பு:07:01 (18/08/2018)

ராதா மோகனின் `60 வயது மாநிறம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

மிழ் சினிமாவில் தனது தனித்துவமான கதை சொல்லல் மூலம் ரசிகர்களின் மத்தியில் தனி இடம் பிடித்திருப்பவர் இயக்குநர் ராதா மோகன். `அழகியே தீயே’, `மொழி’, `அபியும் நானும்’, `பயணம்’, `உப்புக்கருவாடு’ என ரசனையான படங்களைத் தந்தவர். அண்மையில், ஜோதிகாவை வைத்து அவர் இயக்கியுள்ள `காற்றின் மொழி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

ராதா மோகன் இயக்கிய 60 வயது மாநிறம் படம்

இந்நிலையில், அவர் இயக்கியுள்ள மற்றொரு படமான `60 வயது மாநிறம்’ ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாக உள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்தப் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். படத்தின் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்க, அவருக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் உடன் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளதால், படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. 

அண்மையில், `60 வயது மாநிறம்’ படம் சென்சார் குழுவினருக்குத் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த அவர்கள், படம் சிறப்பாக இருப்பதாகக் கூறி, இயக்குநரைப் பாராட்டியுள்ளனர். மேலும், படத்துக்கு `யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர். இது, படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.