வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (18/08/2018)

கடைசி தொடர்பு:07:05 (18/08/2018)

வைக்கம் விஜயலட்சுமியின் பயோபிக் உருவாகிறது !

பிரபலப் பாடகியான வைக்கம் விஜயலட்சுமியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. கேரளா மாநிலம் வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. பார்வையற்றவரான இவர், மலையாளத்தில் வெளியான 'செல்லுலாய்டு' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி முதல் பாடலிலே மாநில அரசின்  விருதுபெற்றார். அதன்பின், தமிழ், மலையாளம் என பல பாடல்கள் பாடியுள்ளார். அவர் பாடிய பல பாடல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

விஜயலட்சுமி

காயத்ரி வீணை என்ற ஒற்றைக் கம்பி மட்டுமே கொண்ட அபூர்வ வீணை வைத்துள்ளார். இந்த வீணையை வாசிக்கத் தெரிந்தவர்களும், வீணை வைத்திருப்பவர்களும்  மிகவும் குறைவு. காயத்ரி வீணையில் தொடர்ந்து 5 மணி நேரத்தில் 67 பாடல்கள் வாசித்து உலக சாதனைப் படைத்தார். தற்போது இவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. அதனை விஜயகுமார் என்பவர் இயக்குகிறார். இந்தப் படத்தில் வைக்கம் விஜயலட்சுமி வேடத்தில் ஹனன் நடிக்கிறார். கல்லூரி மாணவியான இவர் தன் குடும்பத்தின் வறுமை சூழ்நிலையை சமாளிக்கச் சந்தையில் மீன் விற்று வந்தார். கூவிக்கூவி படுஜோராக அவர் மீன்களை விற்பது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. சமூக வலைதளங்களிலும் செம வைரலானார். இதைத் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. 'அரை கள்ளன் முக்கால் கள்ளன்', 'மிட்டாய் தெரிவு', 'வைரல் 2019' ஆகிய படங்களில் கைகோத்திருந்தவர், இப்போது வைக்கம் விஜயலட்சுமியின் பயோபிக்கில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க