கேரளா வெள்ளம் - கையில் கட்டுடன் களத்தில் அமலா பால்! 

'அதோ அந்த பறவை போல' என்னும் ஹீரோயினை மையப்படுத்திய படத்தில் அமலா பால் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் நிறையவே உள்ளன. அவ்வாறு ஸ்டன்ட் காட்சி ஒன்றில் அவர் கையை வேகமாகச் சுழற்றியபோது, தசைநார்களில் காயம் ஏற்பட்டது. இதற்காக, கொச்சியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அமலாபால்

இந்நிலையில், கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை பொருள்களை கடைக்குச் சென்று வாங்கும் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளார். அவர் கையில் கட்டுடன் கடையில் நிவாரண பொருள்கள் வாங்கி வரும் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. சினிமா பிரபலங்கள் பலர் நிதியுதவி செய்ததைத் தொடர்ந்து, தனக்கு உடல்நிலை சரியில்லாதபோதும் களத்தில் இறங்கி மக்களுக்குத் தேவையானவற்றை வழங்கியதால் அமலா பாலை பலர் பாராட்டி வருகின்றனர். அவர் கடையில் பொருள்கள் வாங்கும் போட்டோவை அவரின் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!