அமெரிக்க பாப் பாடகரை கரம்பிடிக்கும் பிரியங்கா சோப்ரா! - மும்பையில் நிச்சயதார்த்தம்

ப்ரியங்கா

PC: indiatoday.in

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் அவரின் காதலர் நிக் ஜோனஸுக்கும் மும்பையில் இன்று நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறது. இதுகுறித்த அதிகாரபூர்வமான செய்தி இன்று வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

பிரியங்கா சோப்ராவும்  பிரபல அமெரிக்க பாப் இசைப்பாடகர் நிக் ஜோனஸும், இந்த வருடத் தொடக்கத்திலிருந்து காதலித்து வருவதாகக் கிசுகிசு வெளியாகிவந்தது. இதை உறுதிசெய்யும் விதமாக, பிரியங்காவும் நிக் ஜோனஸும் பல இடங்களுக்கு ஒன்றாகச் செல்லும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் அவ்வப்போது வெளியாகிக்கொண்டிருந்தன. இந்த நிலையில், சில நாள்கள் முன், நிக் இந்தியா வந்து பிரியங்காவின் அம்மா மது சோப்ராவையும் பிரியங்காவின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்களையும் சந்தித்தார். அதன் பிறகு, நேற்று நிக்கின் பெற்றோர் டெனிஸ் மற்றும் கெவின் ஜோன்ஸ் நேற்று முன்தினம் இந்தியா வந்தனர். அவர்கள் முதல்முறையாகப் பிரியாங்காவின் குடும்பத்தையும் உறவினர்களையும் சந்தித்தாகத் தகவல்கள் வெளியாகின.

ப்ரியங்கா

PC: indiatoday.in

தற்போது, மும்பையில் பிரியங்காவுக்கும் நிக் ஜோனஸுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாகப் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிச்சயதார்த்தம் குறித்து ஊடகங்களுக்கு இன்னும் பிரியங்கா அதிகாரபூர்வமாகத் தெரிவிக்காத நிலையில், இன்று மாலை ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தன் உறவினர்களுக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் பார்ட்டி ஏற்பாடு செய்திருப்பதாக, அவரின் நெருங்கிய வட்டங்கள் தெரிவிக்கின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!