அக்டோபரில் வெளியாகிறதா 'சீதக்காதி' ? | will seethakathi film is release in october?

வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (19/08/2018)

கடைசி தொடர்பு:01:30 (19/08/2018)

அக்டோபரில் வெளியாகிறதா 'சீதக்காதி' ?

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரன் விஜய் சேதுபதியை வைத்து இயக்கியிருக்கும் திரைப்படம் 'சீதக்காதி'. இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், காயத்ரி ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் முதியவர் வேடத்தில் தோன்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் விஜய் சேதுபதி.

சீதக்காதி

அதனைத் தொடர்ந்து வெளியான மேக்கிங் வீடியோவும் இணையத்தில் வைரலானது. ஆஸ்கர் வின்னர் அலெக்ஸ் நோபல் என்னும் மேக்கப் மேன்தான் விஜய் சேதுபதிக்கான 75 வயது முதியவர் தோற்றத்தை கொண்டு வந்தார்.  கொஞ்ச நேரம் மட்டுமே படத்தில் வந்தாலும் அவருக்கு அழுத்தமான கேரக்டராம். ஒரு கலைக்கும், கலைஞனுக்கும் இடையிலான பயணத்தை கூறவிருக்கும் இப்படத்தை அக்டோபர் 5ம் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதிக்கு இது 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close