வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (19/08/2018)

கடைசி தொடர்பு:06:30 (19/08/2018)

ஆகஸ்ட் இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்' !

`டிமான்ட்டி காலனி' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் அஜய் ஞானமுத்து எடுத்திருக்கும் திரைப்படம் 'இமைக்கா நொடிகள்'. இந்தப் படத்தில் நயன்தாரா, அனுராக் காஷ்யப், அதர்வா, ராஷி கண்ணா, ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். விஜய் சேதுபதி கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். சைக்கோ த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். 

இமைக்காநொடிகள்

படத்தின் டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையொட்டி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. யு/ஏ சென்சார் சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படத்தை ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியிட உள்ளனர். ஏற்கெனவே, அந்த தேதியில் ராதாமோகனின் '60 வயது மாநிறம்' படமும் 'அட்டக்கத்தி' தினேஷ் நடிக்கும் 'அண்ணனுக்கு ஜே' படமும் வெளியாக இருக்கிறது. மறுநாள் கார்த்திக் நரேனின் 'நரகாசூரன்' படம்  வெளிவரவிருக்கிறது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க