``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்! | Director of movie kolamavu kokila gets a call from popular actor

வெளியிடப்பட்ட நேரம்: 05:01 (20/08/2018)

கடைசி தொடர்பு:08:27 (20/08/2018)

``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்!

கோலமாவு கோகிலா

நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம்  `கோலமாவு கோகிலா’. இந்தப் படத்தில் யோகி பாபு, ஜாக்குலின் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். டீசர் வெளியானது முதலே இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. இந்தப் படத்தை நெல்சன் இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே வெளியான இப்படத்தின் பாடல்கள் ட்ரெண்டிங் ஆக, படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. 

இந்த நிலையில்தான் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் சினிமா நட்சத்திரங்களும் படம் பார்த்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் ரஜினிகாந்த், படம் பார்த்துவிட்டு இயக்குநர் நெல்சனுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குநர் நெல்சன், ``எனக்கு ஒரு சர்ப்ரைஸ் கால் வந்தது. அது தலைவர் ரஜினிகாந்த்தான். அவர் என்னிடம் சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன் என்றார். நன்றி சார்” எனப் பதிவிட்டுள்ளார். ரஜினியின் வாழ்த்து கிடைத்ததால் கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறது படக்குழு. 

ரஜினி