`நெஞ்சம் மறப்பதில்லை' தொடரை இடம் மாற்றிய `பொண்ணுக்குத் தங்க மனசு'

ஏழைப்பெண்கள் பணக்கார மாப்பிள்ளையை விரும்புவது சீரியல் ட்ரெண்டிங் போல! 'ராஜா ராணி', 'செம்பருத்தி' தொடர்களில் ஹீரோயின்கள் பணக்கார வீட்டில் வேலைக்காரியாக நுழைந்து அந்த வீட்டுக்கே மருமகளாவதுதான் கதை. விஜய் டிவியில் 'சரவணன் மீனாட்சி' தொடர் நிறைவு பெற்றுவிட்டதால் புதிதாக இன்று முதல் (20.08.2018) தினமும் இரவு 8 மணிக்கு (இதே நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த 'நெஞ்சம் மறப்பதில்லை' தொடர் 'சரவணண் மீனாட்சி' ஒளிபரப்பாகி வந்த 8.30 ஸ்லாட்டுக்கு மாறியுள்ளது) ஒளிபரப்பாக இருக்கிற 'பெண்ணுக்குத் தங்க மனசு' தொடரிலும் கதை கிட்டத்தட்ட இதேதான். திவ்யா என்கிற எளிய குடும்பத்துப் பெண் பிரஷாந்த் என்கிற பணக்கார இளைஞனைக் கைப்பிடித்து கதைக்குள் நுழைகிறார்.

விஜய் டிவி

பணக்கார மருமகளைத் தேடி வந்த மாமியாருக்கு ஹீரோ ஹீரோயின் கல்யாணம் அதிர்ச்சியைத் தர, மாமியார் மருமகளுக்கிடையே இனி நடக்கப்போகிற மல்லுக்கட்டுதான் ட்விஸ்ட்களுடன் கதையை நகர்த்தப்போகிறது.'ஸ்த்ரீதனம்' என்கிற பெயரில் மலையாளத்தில் நான்கு வருடங்கள் ஓடி ஹிட் ஆன கதையாம் இது. திவ்யாவாக புதுமுக நடிகை ராதிகாவும், பிரஷாந்த்தாக அஸ்வினும் மாமியார் சேத்துலக்ஷ்மியாக சிரிஷாவும் நடிக்கிறார்கள். ஹாரிசன் இயக்குகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!