கிருஷ்ணா நடிக்கும் `களரி' படத்தின் டிரெய்லர் வெளியானது!

களரி

நடிகர் கிருஷ்ணா நடித்து வெளிவரவிருக்கும் புதிய திரைப்படம் களரி. கிருஷ்ணா, வித்யா ப்ரதீப், சென்றாயன், எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப்  படத்தை கிரண் சந்த் என்பவர் இயக்கியுள்ளார். கேரளாவில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், எதற்கெடுத்தாலும் பயப்படும் கதாபாத்திரத்தில் கிருஷ்ணா நடித்துள்ளார். மேலும், குருதேவ் ஒளிப்பதிவு செய்ய பிரசன்னா இசையமைத்துள்ளார். 

செனித் கெலோத் தயாரித்துள்ள இந்தப்  படத்தின் டீசர் பிப்ரவரி மாதம் வெளியானது. இந்த நிலையில், இந்தப்  படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அண்ணன் தங்கை பாசம், காதல், காமெடி, குடும்பம் எனக் கலந்து டிரெய்லர் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இப்படத்தின் பாடல்கள் வெளியாகிவிட்ட நிலையில், படம் வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 24) வெளியாகும் என டிரெய்லரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!