வெளியிடப்பட்ட நேரம்: 12:07 (23/08/2018)

கடைசி தொடர்பு:12:14 (23/08/2018)

`ஆசப்பட்டா மட்டும் பத்தாது.. அடம் பிடிக்கத் தெரியணும்..!’ - தெறிக்கவிடும் `கனா’ டீசர்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் `கனா’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கனா
 

சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ள படம் `கனா’. மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாகவும் அவருக்குத் தந்தையாக சத்யராஜும் நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் நாளை (ஆகஸ்ட்  23) `கனா’ படத்தின் இசை வெளியாக உள்ளது. இந்தப் படத்துக்கு திபு நிணன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். படத்தில் வரும் `வாயாடி பெத்த புள்ள..’ என்ற பாடலை சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா பாடியுள்ளார்.  

கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணின் கிரிக்கெட் கனவு, மகளின் கனவை நிறைவேற்றத் துடிக்கும் தந்தை, இதுதான் திரைப்படத்தின் மையக் கதை. படத்தின் டீசரில் உள்ள காட்சிகள் உணர்வுபூர்வமாகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க