பிக்பாஸ் வீட்டில் 'சென்னை 28' படத்தின் கதாநாயகி!

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடுபிடித்துக்கொண்டிருக்கிறது. அங்கு கொடுக்கும் சில ஏலியன் லெவல் டாஸ்க்களில் அடி உதை சண்டை என வீடே போர்க்களமாகத்தான் காட்சியளிக்கிறது. இன்று வெளியான ப்ரோமோவில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதுப் போட்டியாளராக நடிகை விஜயலட்சுமி என்ட்ரி கொடுத்துள்ளார். 

விஜயலட்சுமி - பிக்பாஸ்

வெங்கட் பிரபு இயக்கிய 'சென்னை 28' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் விஜயலட்சுமி. 'வான்மதி', 'காதல் கோட்டை' போன்ற படங்களை இயக்கிய அகத்தியனின் மகள், 'பண்டிகை' படத்தை இயக்கிய ஃபெரோஸின் மனைவி என குடும்பமே தமிழ் சினிமாவுடன் நெருக்கமானவர்கள்தான். 'பண்டிகை' படத்துக்கு இவர்தான் தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 'சென்னை 28' படத்தில் 'மிர்ச்சி' சிவாவுக்கு ஜோடியாக நடித்த பின்னர், 'அஞ்சாதே', 'சரோஜா', பிரியாணி' போன்ற படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார்.

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு கலவரங்கள் ஏற்பட்டு வந்த நிலையில் சரியான சமயத்தில் இவரைப் போட்டியாளராக அறிவித்திருக்கிறார் பிக்பாஸ். ஆட்டம் பாட்டம் என வீட்டுக்குள் நுழைந்தவரைச் சந்தோஷமாக வரவேற்றனர் பிக்பாஸ் போட்டியாளர்கள்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!