வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (23/08/2018)

கடைசி தொடர்பு:20:21 (23/08/2018)

லிஸ்ட்டில் வராத ஷாருக் கான்; முன்னேறிய அக்‌ஷய் குமார் - உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள்

உலக அளவில் 2018-ம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள் பட்டியலில், பாலிவுட் நடிகர்கள் அக்‌ஷய் குமார் 7-வது இடத்திலும் சல்மான் கான் 9-வது இடத்திலும் உள்ளனர். 

அக்‌ஷய் குமார்

உலக அளவில் 2018-ம் ஆண்டில் அதிக சம்பளம் பெற்ற நடிகர்கள், நடிகைகளின் பெயர்ப் பட்டியலை உலகப் புகழ்பெற்ற ஃபோப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. 2017 ஜூன் 1 முதல் 2018 ஜூன் 1 வரையிலான காலகட்டத்தில் பெறப்பட்ட சம்பளம் கணக்கிடப்பட்டுள்ளது. உலக அளவில் முதல் 10 இடங்களில் பாலிவுட் நடிகர்கள் இருவர் இடம்பெற்றுள்ளனர். அதில், ஏழாவது இடத்தில் அக்‌ஷய் குமார் இடம் பெற்றுள்ளார். அவர், 2018-ம் ஆண்டில் 40.5 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பளமாகப் பெற்றுள்ளார். இந்திய மதிப்புக்கு சுமார் 283 கோடி ரூபாய் ஆகும். அதேபோல, சல்மான் கான் ஒன்பதாவது இடத்திலுள்ளார். அவர், 38.5 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பளமாகப் பெற்றுள்ளார்.

அதன் மதிப்பு, சுமார் 269 கோடி ரூபாய் ஆகும். கடந்த எட்டாவது இடத்திலிருந்த ஷாருக் கானுக்கு இந்த ஆண்டு இடம் கிடைக்கவில்லை. முதலிடத்தில் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குலுனி உள்ளார். அவருடைய ஆண்டு வருமானம் 1,675 கோடி ரூபாய். இரண்டாம் இடத்தில் ட்வைன் ஜான்சன் உள்ளார். அவருடைய ஆண்டு வருமானம் 869 கோடி ரூபாய். நடிகைகளில் 283 கோடி ரூபாய் ஆண்டு வருமானத்துடன் ஸ்கேர்லெட் ஜான்சன் முதலிடத்தில் உள்ளார்.