விஜய் சேதுபதி - த்ரிஷாவின் `96 பட டிரெய்லர்! | Vijay Sethupathi's 96 Trailer released

வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (24/08/2018)

கடைசி தொடர்பு:17:55 (24/08/2018)

விஜய் சேதுபதி - த்ரிஷாவின் `96 பட டிரெய்லர்!

விஜய் சேதுபதி - த்ரிஷா முதல்முறையாக இணைந்துள்ள `96' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி, த்ரிஷா முதல்முறையாக இணைந்துள்ள `96 படத்தில் இணைந்துள்ளனர். இந்தப் படத்தை மெட்ராஸ் என்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்க, `நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' படத்தின் ஒளிப்பதிவாளர் சி.பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில், டிராவல் போட்டோகிராஃபராக ராம் என்ற கேரக்டரில் விஜய் சேதுபதியும், ஜானு என்ற கேரக்டரில் த்ரிஷாவும் நடித்துள்ளனர். இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நடிகர் ஜனகராஜ் நடித்துள்ளார். ஏற்கெனவே, இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. 

குறிப்பாக, டீசரில் இறுதியாக இடம்பெற்ற `காதலே காதலே தனிப்பெரும் துணையே’ என்ற பாடல் வரிகள் மக்களிடம் பிரபலமானது. அந்தப் பாடலும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. காதலை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ள இதில், பள்ளியில் படிக்கும்போது இருவரும் காதலிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதேபோல, நீண்ட நாள்களுக்குப் பிறகு இருவரும் சந்திப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இசையமைப்பாளர் கோவிந்த வசந்தாவின் பின்னணி இசை, ஒளிப்பதிவாளர்கள் மகேந்திரன், சண்முகசுந்தரத்தின் காட்சி அமைப்புகள் அசத்தலாக அமைந்துள்ளன. இது, தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close