வெளியிடப்பட்ட நேரம்: 18:44 (24/08/2018)

கடைசி தொடர்பு:18:50 (24/08/2018)

அக்டோபர் 2-ல்`சர்கார்' படத்தின் பாடல்கள் வெளியீடு! - படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு

`சர்கார்' படத்தின் பாடல்கள், அக்டோபர் 2-ம் தேதி வெளியிடப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

முருகதாஸ் - விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம், `சர்கார்'. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாகக் கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் சத்தமின்றி சென்னை, அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. 'மெர்சல்' படத்தில் விஜய் அரசியல் பேசினார். அதேபோல இந்தப் படத்திலும் அரசியல் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றார்ப்போல படத்துக்கு 'சர்கார்' என்று பெயரிடப்பட்டுள்ளது என அவரது ரசிகர்கள் தெரிவித்துவருகின்றனர்.

இதற்கிடையே, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், இன்று படம்குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது. அவர்களின் இந்த அறிவிப்பால், விஜய் ரசிகர்கள் குஷியில் இருந்தனர். அதன்படி, தற்போது படம்குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, காந்தி ஜயந்தியான அக்டோபர் 2-ம் தேதி, படத்தின் பாடல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் - ஏ.ஆர்.ரகுமான் காம்பினேஷனில் சமீபத்தில் வெளியான மெர்சல் படத்தின் பாடல்கள் ஹிட் அடித்த நிலையில் இந்தப் படத்தின் பாடல்களுக்கும் தற்போதே ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க