வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (25/08/2018)

கடைசி தொடர்பு:11:54 (25/08/2018)

` வந்தா ராஜாவாத்தான் வருவேன்...' ’செக்க சிவந்த வானம்’ படத்தின் டிரெய்லர்..!

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன், ஜெயசுதா என ஒரு பட்டாளமே நடித்திருக்கும் திரைப்படம், செக்க சிவந்த வானம்.

செக்க

வரதனாக அரவிந்த் சாமி, தியாகுவாக அருண் விஜய், இதியாக சிம்பு என மூவரும் இந்தப் படத்தில் அண்ணன், தம்பியாக நடித்திருக்கிறார்கள். ரசூல் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது. கேங்ஸ்டரும் போலீஸும் என தோட்டாக்கள் தெறிக்க, தெறிக்க இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் மணிரத்னம்.