`உலகத்துக்கே அரசியல் கத்துக்கொடுத்தவன் தமிழன்!' - ஜி.வி.பிரகாஷின்  ‘அடங்காதே’ டிரெய்லர்

ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடங்காதே’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

அடங்காதே

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘அடங்காதே’. இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகச் சுரபி நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சரத்குமார், பிரபல இந்தி நடிகை மந்திரா பேடி தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷே இப்படத்தின் இசைப் பணிகளை கவனிக்க, இதற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் எம்.எஸ்.சரவணன் தயாரித்திருக்கிறார். நீண்ட நாள்களாக இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்ட பணிகளை எட்டியுள்ளது. இந்நிலையில் தற்போது இதன் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

மதக் கலவரங்களும், அதைவைத்து நடத்தப்படும் அரசியலை வைத்துக் கதை பின்னப்பட்டுள்ளது. இஸ்லாமிய இளைஞனான ஜி.வி.பிரகாஷுக்கும், இந்துப் பெண்ணான சுரபிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. `அதிகாரம் இருந்தா இங்க எத வேணுமானாலும் செய்யலாம்', `உலகத்துக்கே அரசியல் கத்துக்கொடுத்தவன் தமிழன்',  `தமிழன்கிட்ட கட்சியை கொண்டு சேர்ப்பது சாதாரணமானது கிடையாது' போன்ற வசனங்கள் தூக்கிப்பிடிக்க டிரெய்லர் வெளியாகியுள்ளது. இது தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!