‘எவ்வளவு அடிச்சாலும் வலிக்காது அவனுக்கு’ - மஹத்தை வரவேற்ற சிம்பு

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த மஹத்தை, அவரது நண்பர் சிம்பு அடித்து வரவேற்கும் காட்சிகள் வெளியாகி, பெரும் வைரலாகி வருகிறது. 

சிம்பு

பிக்பாஸ் வீட்டுக்குள் கடந்த வாரம் நடைபெற்ற எலிமினேஷனில், எட்டாவது போட்டியாளராக ரெட் கார்டுடன் வெளியேற்றப்பட்டார் மஹத். மும்தாஜ், டேனியுடனான எல்லைமீறிய விளையாட்டுகளும் சேட்டைகளுமே மஹத்தை வெளியேற்றின. ‘ஆட்டத்தைத் தப்பாக ஆடிவிட்டீர்கள் மஹத்; தப்பான ஆட்டம் ஆடியவர்களுக்கு ரெட் கார்டு தருவதே சரியான தீர்ப்பாக இருக்க முடியும்’ என்றபடி வசமான குறும்படம் ஒன்றையும் போட்டுக்காட்டி, அவர் வெளியே அனுப்பிவைக்கப்பட்டார். 

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த மஹத்துக்கு பலத்த வரவேற்பு அளித்துள்ளார் நடிகர் சிம்பு. இது தொடர்பாகத் தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள மஹத், “பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய என்னை எனது நண்பன் சிம்பு இப்படித்தான் வரவேற்றார். 'லவ் யூ டா' எனப் பதிவிட்டு, அத்துடன் ஒரு வீடியோவையும் இணைத்துள்ளார். அந்த வீடியோவில் சிம்பு, மஹத்தை பலார் என கன்னத்தில் மூன்று முறை அரைந்துவிட்டு கட்டியணைத்துக்கொள்கிறார். ‘ எவ்வளவு அடிச்சாலும் வலிக்காது. அவ்வளவு அடி வாங்கிருக்கான் உள்ள’ என ஒரு வாய்ஸ் மட்டும் கேட்கிறது.   இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

முன்னதாக நடைபெற்ற விகடன் பிரஸ் மீட்டில், மஹத் குறித்த கேள்விக்கு, ‘ பிக்பாஸ் வீட்டுக்குள் மஹத் தப்பு செஞ்சா நானே சட்டைய புடுச்சி கேட்பேன்’ என சிம்பு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!