வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (28/08/2018)

கடைசி தொடர்பு:16:15 (28/08/2018)

`அடுத்து நான் பண்ணப்போற படம்?' - தம்பியுடன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மோகன் ராஜா!

தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை இயக்கப்போவதாக இயக்குநர் மோகன் ராஜா அறிவித்துள்ளார். 

ராஜா

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் அவரின் தம்பி ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் தனி ஒருவன். ரீ-என்ட்ரியில் அரவிந்த் சாமி காட்டிய வில்லத்தனம், நேர்த்தியான திரைக்கதை, சிறப்பான காட்சி அமைப்புகள், ஹிப் பாப் ஆதியின் பின்னணி இசை ஆகியவற்றால் அந்த வருடத்தின் மெகா ஹிட் படமாகத் தனி ஒருவன் அமைந்தது. இதன் பிறகு, தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி, மோகன் ராஜாவின் கிராஃப் உயர்ந்தது. படத்தின் மெகா வெற்றியால் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதற்கிடையே, இன்றுடன் தனி ஒருவன் வெளியாகி மூன்று வருடங்கள் ஆகின்றன. இதை ஜெயம் ரவி ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்யும் வகையில் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை இயக்கப்போவதாக இயக்குநர் மோகன் ராஜா அறிவித்துள்ளார். 

இதுகுறித்து மோகன்ராஜா வெளியிட்டுள்ள வீடியோவில், ``வணக்கம் நண்பர்களே, ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னையோடு தனி ஒருவன் வெளியாகி மூணு வருஷம் ஆச்சு. வருஷம் ஆக ஆகப் படத்தோட மரியாதையை உங்கள் அன்பால் அதிகரிச்சுட்டே போறீங்க. உங்களுடைய அன்பால் தனி ஒருவன் என் வாழ்க்கையில் நல்ல படமா அமைஞ்சுருக்கு. இந்த நல்ல நேரத்துல்ல அடுத்து நான் பண்ணப் போற படம் குறித்த அறிவிப்பை வெளியிடுறேன். அடுத்து நான் பண்ணப்போற படம் தனி ஒருவன் இரண்டாம் பாகம். கண்டிப்பா முதல் பாகத்தைவிட சிறந்த படமாகத் தர வேலை செய்வோம்" என்றார். அப்போது ஜெயம் ரவியும் உடனிருந்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க