Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்

•  ''2011 எனக்கு ரொம்பவும் சந்தோஷமாகவே கழிந்திருக்கிறது. தமிழிலும் தெலுங்கிலுமாக ஐந்து படங்கள் வெளியாகி இருக்கின்றன.  வெரி ஹாப்பி. 'ரொம்ப ஸ்லிம் ஆயிட்டே’ன்னு ஃப்ரெண்ட்ஸ்லாம் சொல்றாங்க. பகல்லயும் நல்லா தூங்கணும். அதான் என் 2012 பிளான்!'' என்று தன் புத்தாண்டுத் தீர்மானம் சொல்கிறார்  தமன்னா. கனவுல யார் வருவாங்க தமன்?

இன்பாக்ஸ்

•  கடந்த வாரம் லண்டனில் நடைபெற்ற ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியில் டேவிட் ஃபெரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரோஜர் ஃபெடரர். சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் அவர் பங்கேற்ற 100-வது இறுதிப் போட்டியான இதில், அவர் ஈட்டியிருப்பது 70-வது வெற்றி. மைல்ஸ் டு கோ ரோஜர்!

##~##

• விளம்பரங்களில் நடிக்கும் ஹீரோக்கள் வரிசையில் சிம்புவும் இடம் பிடித்திருக்கிறார்.   குளிர்பான நிறுவனத்தின் விளம்பரத்துக்காக ஹைதராபாத் சென்று நடிக்க இருக்கிறார். அதே விளம்பரத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடிக்க இருப்பது அல்லு அர்ஜுன். கூல் டீல்!

• சர்வே ஒன்றில் இந்திய இளைஞர்கள் அதிகம் வெறுக்கும் டாப் 10 அரசியல்வாதிகளாக அறியப்பட்டு இருப்பவர்களின் பட்டியல் இதோ... சரத்பவார் - மத்திய உணவுத் துறை அமைச்சர், தினேஷ் திரிவேதி - மத்திய ரயில்வே அமைச்சர், மன்மோகன் சிங் - பிரதமர், எல்.கே.அத்வானி - பா.ஜ.க., நிதின் கட்கரி - பா.ஜ.க., பிரகாஷ் காரத் - சி.பி.எம் பொதுச் செயலாளர், மு.கருணாநிதி- தி.மு.க. தலைவர், ஜெ.ஜெயலலிதா - தமிழக முதல்வர், ப.சிதம்பரம் - மத்திய உள்துறை அமைச்சர், நரேந்திர மோடி - குஜராத் முதல்வர். விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் அடிக்கடி வெளிநாட்டு சுற்றுப் பயணங்களில் பங்கெடுப்பதுதான் சரத்பவார்  மீது ஏக அதிருப்தியைக் குவித்திருக்கிறது. கிராமங்களை நோக்கி படையெடுங்க தலைவர்களே!

இன்பாக்ஸ்

•  2012-ம் ஆண்டின் புத்தாண்டுக் கொண் டாட்டங்களின் 'பார்ட்டி க்வீன்’ கேத்ரீனா கைஃப்தான். டிசம்பர் 31-ம் தேதி இரவு மும்பையில் நடக்க இருக்கும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் அரை மணி நேர ஆட்டத்துக்கு

இன்பாக்ஸ்

5 கோடி டீலுக்கு ஓ.கே. சொல்லி இருக்கிறார் கேத்ரீனா. மல்லிகா ஷெராவத்

இன்பாக்ஸ்

3 கோடி  டீலை லபக்கி இருக்கிறார். அவங்களுக்கு மட்டும்தான் ஹாப்பி நியூ இயர்!

இன்பாக்ஸ்

• 'தி எம்பரர் ஆஃப் ஆல் மலடீஸ்’ என்ற தலைப்பில் புற்றுநோய் பற்றி புத்தகம் எழுதி புலிட்சர் விருது பெற்ற இந்திய அமெரிக்க எழுத்தாளர் சித்தார்த்த முகர்ஜி, இன்னும் ஒரு சிறப்பு அங்கீகாரம் பெற்றிருக்கிறார். இங்கிலாந்தின் புகழ்பெற்ற 'தி கார்டியன்’ நாளிதழ் நிறுவனத்தால் வழங்கப்படும் 'கார்டியன் ஃபர்ஸ்ட் புக்’ விருதுக்குத் தேர்வாகி இருப்பதே அது. வாழ்த்துக்கள் சித்தார்த்!

•  பேத்தி பிறக்கும் சமயத்தில் மீடியாவுக்கு ஆயிரம் கட்டளைகள் போட்டார் அமிதாப். அது மதிக்கப்பட்ட சந்தோஷத்தில் இருந்தவரை மீண்டும் வம்புக்கு இழுத்து இருக்கிறது வடஇந்திய மீடியாக்கள். 'மகன் கல்யாணத்தை நியூஸ் சென்சேஷன் ஆக்கியது போல, பேத்தியின் போட் டோவை விற்க முயற்சிக்கிறார் அமிதாப்!’ என்று கிளம்பிய செய்திகள்தான் தாத்தாவின் கோபத்துக்குக் காரணம். 'குட் ட்ரை.., ஆனால், அது ஒருபோதும் நடக்காது!’ என்று ட்விட்டரில் தட்டியிருக்கிறார் தாத்தா. அதுக்குள்ளயே வி.ஐ.பி. ஆகிருச்சே பேத்தி!

• டாம் க்ரூஸின் 'மிஷன் இம்பாஸிபிள்’ ஹிட் வரிசையில் நான்காவது பாகம் தயார். 'மிஷன் இம்பாஸிபிள்: கோஸ்ட் புரோட்டோகால்’ படத்தில்   இவருடன் கைகோத்திருக்கும் இந்தியப் பிரபலம்... பாலிவுட்டின் அனில் கபூர். அனிலுக்கு அணில் சைஸ் கேரக்டர்தான் கொடுப்பாங்க!

இன்பாக்ஸ்

•  காதல், கல்யாண வதந்திகளால் மனம் நொந்து இருந்த அஞ்சலி முகத்தில் மீண்டும் மலர்ச்சி. 'கரிகாலன்’ படத்தில் விக்ரமுடன் நடிக்கக் கிடைத்திருக்கும் வாய்ப்பு தந்த உற்சாகம் அது. 'எந்த நடிகருடனும் இணைத்து கிசுகிசு எழுதாதீங்க ப்ளீஸ்... 'அங்காடித் தெரு’வுக்குப் பிறகு இப்போதான் நான் ஆசைப்பட்ட மாதிரி சான்ஸ் வர ஆரம்பிச்சிருக்கு!’ என்று நெருக்கமான மீடியா நண்பர்களுக்கு மெசேஜ் தட்டுது பொண்ணு. அசத்துங்க அஞ்சலி!

இன்பாக்ஸ்

•  பாக்ஸிங் உலகின் சமீப சென்சேஷன், சாஷா பென்டிங்டன். 15 வயதான சாஷா இங்கிலாந்தின் இளம் குத்துச்சண்டை வீராங்கனை. இந்த ஆண்டு மட்டும் ஆறு சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்று மீடியா கவனத்தை ஈர்த்திருக்கிறார். மாடலிங்கிலும் ஆர்வம் கொண்டவர் என்பதால் சாஷாவுக்கு விளம்பர வாய்ப்புகளும் க்யூ கட்டுகின்றன. மிஸ் பியூட்டியின் கனவு, ஒலிம்பிக் பதக்கம். குத்துங்க அம்மணி குத்துங்க!

இன்பாக்ஸ்

•  சச்சினின் 100-வது சதத்துக்கு அவருடைய ரசிகர்கள் மட்டுமல்ல; அவரின் சுயசரிதைப் புத்தகமும் காத்திருக்கிறது. தங்க முலாம் பூசப்பட்ட 700-க்கும் அதிகமான பக்கங்களில் அரிய புகைப்படங்களும் செய்திகளும் அடங்கி இருக்குமாம். டெண்டுல்கரின் அதிகாரபூர்வ சுயசரிதையான இந்தப் புத்தகத்தை டெண்டுல் கரின் 100-வது சதத்துக்குப் பிறகுதான் வெளியிடுவது என்று அறிவித்து இருக்கிறது ஒபஸ் நிறுவனம். அஞ்சலியுடன் எப்படி காதல் மலர்ந்தது என்பதை முதன்முறையாக இப் புத்தகத்தில் எழுதியிருக்கிறாராம் டெண்டுல் கர். இப்புத்தகம் ஒன்றின் எடை மட்டுமே 37 கிலோ. 'வெயிட்’டான புத்தகம்தான்!

• பாகிஸ்தான் நாட்டு பிரதமர் யூசஃப் கிலானி, தன் 'பாகிஸ்தான் மக்கள் கட்சி’ சார்பாக அடுத்த பிரதமர் போட்டியாளரை அறிவித்துவிட்டார். அந்தப் போட்டியாளர் பிலவால் புட்டோ சர்தாரி. படுகொலை செய்யப்பட்ட பெனாசிர் புட்டோவின் மகன் இவர். வாரிசு அரசியலைத் தவிர்க்கவே முடியாதோ!