Published:Updated:

சசிகலா எம்.பி.பி.எஸ்?!

கே.ராஜாதிருவேங்கடம்

பிரீமியம் ஸ்டோரி
##~##

''ஈரோட்டுல ஒரு கூட்டத்துக்கு வந்திருக்கேன். ஏகப்பட்ட தோழர்கள் சுத்தி இருக்காங்க. பரவாயில்லை கேளுங்க...'' - தோழர் நல்லக்கண்ணு.

 ''நான் ரெடி!'' - கர்னாடக சங்கீதப் பாடகி சௌம்யா.

''இப்பவே கேட்பீங்களா சார்... நான் இப்பவே பதில் சொல்லணுமா சார்..?'' - இயக்குநர் ரா.பார்த்திபன்.

''என்னலாம் கேட்பீங்கனு தெரியலையே! சரி... டிரை பண்ணுவோம்!''- மருத்துவர் ஷாலினி.

''அச்சச்சோ... இந்தியாவுக்கு கேப்பிடல் எதுனு கேட்டாலே, எனக்குக் குழப்பும்!'' - சன் மியூஸிக் ஸ்ரீதேவி மகேஷ்.

''கமல் சாரோட ஒரு கான்ஃபரன்ஸ்ல இருந்தேன். இப்பதான் பிரேக்ல வெளியே வந்தேன். யெஸ்... ப்ளீஸ்!'' - நடிகை பூஜா.

தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பெயர் என்ன?

விடை: நவநீத கிருஷ்ணன்

சசிகலா எம்.பி.பி.எஸ்?!

நல்லக்கண்ணு: ''நவநீத கிருஷ்ணன்!''

சௌம்யா: ''பரமசிவமா... இல்லையே... அவரு ரிட்டையர் ஆகிட்டாரோ?''

பார்த்திபன்: ''அது அவரைக் கேட்டாத்தான் தெரியும். என்னைக் கேட்டா எப்படி சார்?''

ஷாலினி: ''இதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிஞ்ச மாதிரி கேளுங்களேன்!''

ஸ்ரீதேவி: ''இதுக்கு மூணு ஆப்ஷன் கொடுங்களேன். ஏதோ ஒண்ணு க்ளிக் ஆகுதா பார்க்கலாம்!''

பூஜா: ''ஓ... ஜென்ரல் நாலேஜ்? எனக்கு அதெல்லாம் தெரியாது!''

உலகிலேயே அதிகமாக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடு எது?

விடை: இந்தியா

நல்லக்கண்ணு: ''வேற எது? அமெரிக்கா தான்!''

சௌம்யா: ''பாகிஸ்தான்னு நினைக்கிறேன்!''

பார்த்திபன்: ''உலகிலேயே எந்த நாடு அதிகமா ஆயுதங்களை ஏற்றுமதி செய்யாம இருக்கோ... அந்த நாடுதான்!''

ஷாலினி: ''எந்த நாடா இருக்கும்? ஒரு சின்ன க்ளூ கொடுங்க... நிச்சயம் சொல்லிடுவேன்!''

ஸ்ரீதேவி: ''மே பி... இரான்!''

பூஜா: ''எந்த நாடு... எந்த நாடு... எந்த நாடு... நம்ம நாடா?''

சசிகலா எத்தனையாவது வரை படித்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்?

விடை: 10-ம் வகுப்பு

நல்லக்கண்ணு: ''சொன்னாங்களா... தெரிய லையே!''

சௌம்யா: ''ஐயையோ... எனக்கு அதெல்லாம் தெரியாது!''

பார்த்திபன்: ''அவுங்க எந்த க்ளாஸ் வரைக்கும் படிச்சிருந்தாலும் கண்டிப்பா அதுல ஃபர்ஸ்ட் கிளாஸ்லதான் பாஸ் பண்ணி இருப்பாங்க!''

ஷாலினி: ''சசிகலாவா..? எட்டாவதா... பத்தாவதா..? அதுக்குள்ளதான் ஏதாவது படிச்சிருப்பாங்க!''

ஸ்ரீதேவி: ''அவங்க எம்.பி.பி.எஸ். படிச்சிருக் காங்க. ஆனா, ஏன் டாக்டர்னு போட மாட்டேங்கிறாங்க?''

பூஜா: ''ஜெயலலிதாகூட இருப்பாங்களே... அவங்களைத்தானே கேட்கிறீங்க. ஜெயலலிதா மேடம் இங்கிலீஷ்ல பிச்சு உதறுவாங்க. அப்ப சசிகலாவும் அவங்களுக்கு ஈக்வலாதான் படிச்சிருப்பாங்க!''

சசிகலா எம்.பி.பி.எஸ்?!

'கனிமொழியை எப்படி வரவேற்பீர்கள்’ என்ற கேள்விக்கு கருணாநிதி இரண்டே வார்த்தைகளில் அளித்த பதில் என்ன?

விடை: 'அப்பாடா... வந்தியே?’

நல்லக்கண்ணு: ''நல்லபடியாதான் சொல்லி இருப்பாரு. பாசமான பொண்ணு இல்லைங்களா?''

சௌம்யா: ''வா மகளே... வா!''

பார்த்திபன்: ''என்ன சார் சொல்லி இருக்கப்போறாரு? 'தி.மு.க-வின் ஜெயலலிதாவே வருக’னு சொல்லி இருப்பார்!''

ஷாலினி: '' 'ரொம்ப சந்தோஷம்மா!’ இப்படிச் சொன்னாரா?''

ஸ்ரீதேவி: ''கனிமொழிக்குப் புது பதவி காத்திருக்குனு சொன்னதா ஞாபகம்!''

பூஜா: ''ம்ஹூம்... தெரியலை. பட் டிரை பண்றேன். வெரி ஹேப்பி மை டியர் டாட்டர். ரைட்?''

சாரு நிவேதிதா எழுதியிருக்கும் புதிய நாவலின் பெயர் என்ன?

விடை: எக்ஸைல்

நல்லக்கண்ணு: ''சரியா நினைவுக்கு வரலை!''

சௌம்யா: ''ஓ... நான் படிக்கலையே! விசாரிச்சுப் பார்க்குறேன்!''

பார்த்திபன்: ''ஜீரோ டிகிரி என்பது அவரோட பிரபல நாவல். அநேகமா இந்தப் புத்தகம் மைனஸ் ஜீரோ டிகிரியா இருக்கும்!''

ஷாலினி: ''சாருவோட புத்தகங்களை நான் படிச்சிருக்கேன். ஆனா, இப்போ என்ன எழுதி இருக்கார்னு தெரியலையே!''

ஸ்ரீதேவி: ''மகேஷ் இருந்தாலாவது கேட்டுச் சொல்வேன். அவர் இப்போ வீட்ல இல்ல. நான் இட்லி சாப்பிட்டுட்டு இருக்கேன்னு போட்டுக்கோங்க!''

பூஜா: ''அடக் கடவுளே... இப்படி எல்லாக் கேள்வியும் எனக்குத் தெரியாத கேள்வியாக் கேட்டா... இந்தச் சின்னப் பொண்ணு என்ன பண்ணும். பூஜா பாவம்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு