Published:Updated:

பவர் ஸ்டார் இப்போது வாரண்ட் ஸ்டார்

பவர் ஸ்டார் இப்போது வாரண்ட் ஸ்டார்
பவர் ஸ்டார் இப்போது வாரண்ட் ஸ்டார்
பவர் ஸ்டார் இப்போது வாரண்ட் ஸ்டார்

மதுரை: 9 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில் ஆஜராகாத நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்து ஆஜர்படுத்த போலீசாருக்கு மதுரை நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

மதுரை, பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரின் மகன் கணேஷ்குமாரிடம் கடந்த 3.11.2011 அன்று நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் அவருடைய சொந்த தேவைகளுக்காக ரூ.9 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை ஒரு சதவீத வட்டியுடன் 2 மாத காலத்திற்குள் திரும்ப தருவதாக கூறியுள்ளார் பவர் ஸ்டார்.

இதை நம்பிய கணேஷ்குமார் பணம் கொடுத்துள்ளார். ஆனால் பவர் ஸ்டார் சீனிவாசன் வட்டி, அசலை திரும்ப கொடுக்கவில்லை. பின்னர் பவர் ஸ்டார் 3.1.2012 தேதியிட்டு அவரது வங்கி கணக்கில் இருந்து செக்கை கொடுத்துள்ளார். கணேஷ்குமார் அதை அவரது கணக்கில் செலுத்தியபோது, போதிய பணம் இருப்பில் இல்லை என்று கூறி திரும்பி வந்தது.

இதையடுத்து பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு எதிராக கணேஷ்குமார் மதுரை 2வது விரைவு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதெல்லாம் சீனிவாசன் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்துள்ளார்.

##~~##
இந்த நிலையில் வழக்கு விசாரணை நேற்று நீதிபதி (பொறுப்பு) வி.இருதயராணி, பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்ததோடு, வழக்கு விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
கடந்த 30ஆம் தேதி நாமக்கல்லைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவரிடம் நிலம் தருவதாக கூறி 2 லட்ச ரூபாய் மோசடி செய்த பவர் ஸ்டாருக்கு, நாமக்கல் குற்றவியல் முதன்மை நீதிமன்றம், ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.