Published:Updated:

நீதியின் உயரம்!

கவிப்பேரரசு வைரமுத்துபடம் : கே.ராஜசேகரன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இது 150-ம் ஆண்டு! நாட்டின் கவனத்தை ஈர்த்த பல சென்சிட்டிவ் வழக்குகளில் முக்கியமான தீர்ப்புகளை அளித்த இந் நீதிமன்றத்துக்குத் தமிழகத்தின் பெருமித அடையாளங்களுள் முதன்மை இடமுண்டு.  

 சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடந்த உயர் நீதிமன்றத்தின் 150-வது ஆண்டு விழாவைச் சிறப்பிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் உயர் நீதிபதிகளும் இந்தியா முழுவதிலும் இருந்தும் கலந்துகொண்டார்கள்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அமைந்தது உயர் நீதிமன்றத்தின் சிறப்புகளைப் பட்டியலிட்ட கவிஞர் வைரமுத்துவின் பாடல்! இசையமைப்பாளர் பரத்வாஜின் இசையில் ஒலித்த அந்தப் பாடல், விழா மேடையில்  ஒரு முறை பாடி முடிக்கப்பட்டதும், அரங்கத்தில் குழுமியிருந்த நீதிமான்கள் பாடலுக்கு 'ஒன்ஸ் மோர்’ கேட்டார்கள். நீதிபதிகளின் விருப்பத்திற்கு இணங்கப் பாடல் மீண்டும் பாடப்பட்டது.

பாடலின் கருத்தை ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழிபெயர்த்து அறிந்துகொண்ட நீதிபதிகள் கவிஞர் வைரமுத்துவை மனம் திறந்து பாராட்டினார்கள்.

நீதிபதிகளை நெகிழவைத்த அந்தப் பாடல் இங்கே...

நீதியின் உயரம்!

நீதியின் உயரம்
நேர்மையின் உறுதி
சென்னை உயர் நீதிமன்றம்

அறத்தின் கவசம்
அழியாத வெளிச்சம்
சென்னை உயர் நீதிமன்றம்

மேற்கே சூரியன் தோன்றி மறையலாம்
மேல்நோக்கி மழை பொழிந்து கழியலாம்
ஆனால் -
ஒரு நாளும் நீதி பிறழாது - சென்னை
உயர் நீதிமன்றம் வழுவாது

காசு பணங்கள் கடந்து நீதியைக்
காவல் புரிவது உயர் நீதிமன்றம்
கடவுள் நம்பிக்கை இல்லாத பேர்க்கும்
கடைசி நம்பிக்கை உயர் நீதிமன்றம்

ஆளவந்தாரை லட்சுமிகாந்தனை
ஆய்ந்து சொன்னது உயர் நீதிமன்றம்
ஆளவந்தோரின் நன்மை தீமையை
அறுதி செய்வதும் உயர் நீதிமன்றம்

உண்மைகள் கூடி சத்தியம் கட்டிய
உறுதிகொண்டது உயர் நீதிமன்றம்
உலகப் போரில் குண்டு விழுந்தும்
உடைந்து போகாத உயர் நீதிமன்றம்

ஆண்டவர் ஆள்வோர் யார் சொன்னாலும்
அசைந்து கொடுக்காத உயர் நீதிமன்றம்
அறங்களாலே சமூகம் காக்கும்
அரண்கள் அமைக்கும் உயர் நீதிமன்றம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு