`இமைக்கா நொடிகள்' படரிலீஸில் சிக்கல் ஏன்?

நயன்தாரா, அதர்வா நடித்துள்ள `இமைக்கா நொடிகள்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி கெளரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார். இன்று படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் திடீரென திரைப்படம் வெளிவரவில்லை. சென்னையின் பிரதான தியேட்டர்களில் முன்கூட்டியே ரிசர்வேஷன் செய்து வைத்திருந்த விஜய் சேதுபதி, நயன்தாரா ரசிகர்கள் படம் ரிலீஸ் ஆகாததால் ஏமாற்றம் அடைந்தனர்.

இமைக்கா நொடிகள்

என்னதான் கரணம் என்று விசாரித்தோம். ''நயன்தாரா நடித்துள்ள 'இமைக்கா நொடிகள்' படத்தின் இந்தி ரிலீஸ் உரிமையைத் தருவதாக இரண்டு நபர்களிடம் முன்கூட்டியே பணம் வாங்கிவிட்டனர். ஒருவருக்குப் படத்தை தருவதாகத் தயாரிப்பு தரப்புச் சொல்ல டென்ஷனான இன்னொருவர் கோர்ட்டுக்குப் போய்விட்டார். இப்போது இருவரையும் அழைத்து ஒருவருக்கு திரைப்படம் வெளியிடும் உரிமையும் இன்னொருவருக்கு வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுப்பதும் என்று சமரசம் செய்து வைத்திருக்கிறார்கள். அடுத்து படத்துக்காகப் பணம் வாங்கிய ஃபைனான்ஷியருக்கு இன்னும் பணம் முழுமையாகச் செட்டில் செய்யவில்லை. அதனால் அவர் பட ரிலீஸுக்கு முட்டுக்கட்டைப் போட்டிருக்கிறார். இப்போது ஃபைனான்ஷியருக்கும் பணம் செட்டில் செய்யும் வேலையும் பரபரப்பாக நடந்துவருகிறது. அநேகமாக இன்று மாலைக்காட்சி 'இமைக்கா நொடிகள்' திரைப்படம் உறுதியாகத் திரையிடப்படும் என்று சமரசம் செய்து சிக்கலை தீர்த்துவரும் அபிராமி ராமநாதன் நம்பிக்கையோடு சொன்னார்'' என்று நம்மிடம் விளக்கம் சொன்னார்கள்.     

Do you like the story?

Please Appreciate the Author by clapping!