ரூ.1,000 கோடியில் தயாராகும் 'மகாபாரதம்' - பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்!

ரூ.1,000 கோடியில் உருவாக்கப்பட உள்ள 'மகாபாரதம்' படத்தில் நடிக்க, 'பாகுபலி' பிரபாஸின் பெயரை இந்தி நடிகர் அமீர் கான் பரிந்துரை செய்துள்ளார், என பாலிவுட் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுவருகின்றன. 

அமீர் கான் - பிரபாஸ்

பாகுபலியின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, வரலாற்றுக் கதைகளைப் படமாக்க திரையுலகம் ஆர்வம்காட்டிவருகிறது. இந்தியாவின் பிரதான மொழிகளான தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வரலாற்றுப் படங்கள் தயாராகிவருகின்றன. அதன்படி, இந்தியில் மகாபாரதத்தைப் படமாக்க உள்ளதாகவும், அதில் அமீர் கான் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் எனவும், ஏற்கெனவே செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. ஆனால், அமீர் கான் இதுகுறித்து எதுவும் கூறவில்லை. மாறாக, `தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்' படப்பிடிப்பில் அவர் பிஸியாக நடித்துவருகிறார். இதற்கிடையே, மீண்டும் மகாபாரதம் படம் தொடங்க உள்ளதாக பாலிவுட் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுவருகின்றன. 

அதில், ரூ.1,000 கோடி செலவில் மகாபாரதத்தைப் படமாக்க முகேஷ் அம்பானியின் நிறுவனம் முன்வந்துள்ளது. கிருஷ்ணன் அல்லது கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் காட்டிவந்த அமீர் கானுக்கு, தற்போது கிருஷ்ணன் வேடம் கொடுக்கப்பட்டுள்ளது. திரௌபதி வேடத்தில் தீபிகா படுகோன் நடிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், அர்ஜுனன் கதாபாத்திரத்தில் பாகுபலி பிரபாஸ் நடிக்க வேண்டுமென அமீர் கான் பரிந்துரைத்துள்ளார் எனவும், மற்ற கதாபாத்திரங்களின் தேர்வு நடைபெற்றுவருகிறது எனவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!