வெளியிடப்பட்ட நேரம்: 19:37 (01/09/2018)

கடைசி தொடர்பு:19:41 (01/09/2018)

`இதுவரைக்கும் சீமராஜாவத்தான பாத்த.. இனிமேல் ராஜாதிராஜாவா பாப்ப!' - சீமராஜா டிரெய்லர்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா படத்தின் டிரெய்லர் வெளியானது. 

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சீமராஜா. இந்தப் படத்தின் டீசர் ஆகஸ்ட் 3-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையை பெரும் வரவேற்பைப் பெற்றது. 24 ஏ.எம் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையை பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வாரேன்.. வாரேன் சீமராஜா பாட்டின் லிரிக்கல் வீடியோ பாடலை 50 லட்சம் பார்வையாளர்களை நெருங்கியுள்ளது. மற்ற பாடல்களும் யூடியூப்பில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. சீமராஜா படம், விநாயகர் சதுர்த்தியான செப்டம்பர் 13-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.