செப்டம்பர் 28-ல் `பரியேறும் பெருமாள் ரிலீஸ்’ - தயாரிப்பாளர் பா.இரஞ்சித் அறிவிப்பு! | Pariyerum perumal releasing on september 28

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (01/09/2018)

கடைசி தொடர்பு:22:00 (01/09/2018)

செப்டம்பர் 28-ல் `பரியேறும் பெருமாள் ரிலீஸ்’ - தயாரிப்பாளர் பா.இரஞ்சித் அறிவிப்பு!

''கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்'' என்ற அம்பேத்கரின் வாசகத்துடன் டீசரை தொடங்கிய 'பரியேறும் பெருமாள்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ராமின் உதவி இயக்குநர் மாரி செல்வராஜ் எடுத்திருக்கும் இந்தப் படத்தை நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கிறார். 

பறியேறும் பெருமாள்

கதிர், கயல் ஆனந்தி நடித்திருக்கும் இந்தப் படம் தென் தமிழகத்தில் நடக்கும் சாதியக் கொடுமைகளைப் பற்றியும் பேசியிருக்கிறது. மேலும், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தின் கறுப்பி என்கிற நாய் நடித்திருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு படத்தில் இடம்பெற்ற `ஏய் கறுப்பி' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படம் செப்டம்பர் 28-ம் தேதி ரிலீஸாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். வரும் 9-ம் தேதி இசை வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க