வெளியிடப்பட்ட நேரம்: 17:46 (03/09/2018)

கடைசி தொடர்பு:17:46 (03/09/2018)

`அரசியலை நான் வெறுக்கிறேன்’- விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’ டிரெய்லர் போஸ்டர்

நடிகர் விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகும் ‘நோட்டா’ படத்தின் டிரெய்லர், வரும் 6 -ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய் தேவரகொண்டா நடிக்கும் நோட்டா

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகும் படம், ‘நோட்டா’. அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், தமிழகத்திலும் பிரபலம். 'அரிமா நம்பி', 'இருமுகன்' ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர், இந்தப் படத்தை இயக்குகிறார். இதில் சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, சாம் சி.எஸ் இசையமைக்கிறார். அரசியல் தொடர்பான கதையான நோட்டா விரைவில் வெளியாக உள்ளது.  இந்நிலையில், இந்தப் படத்தின் டிரெய்லர் செப்டம்பர் 6 -ம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்ட நடிகர் விஜய், “நான் அரசியலை வெறுக்கிறேன். ஆனால், அதைச் செய்ய வேண்டும்  என்றால் இப்படித்தான் செய்து முடிப்பேன்” என்று கூறி, இந்தப் படத்தின் டிரெய்லர் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.  இந்தப் படத்தின், ஸ்னீக் பீக் காட்சி இரண்டு நாளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.