வெளியிடப்பட்ட நேரம்: 14:56 (04/09/2018)

கடைசி தொடர்பு:18:17 (04/09/2018)

ஆச்சர்யப்படுத்திய பாலாஜி... கண்ணீர்விட்ட ஜனனி #BiggBossTamil2

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. இந்த வாரம் வெளியேற்றும் படலத்துக்கு 5 பேரின் பெயர்கள் இறுதிசெய்யப்பட்டன. ஆனால், இன்று வெளியான ப்ரோமோவை வைத்துப்பார்க்கும்போது, பிக் பாஸ் அவர்களுக்கு இன்னொரு சான்ஸ் கொடுத்திருக்கிறார் என்பது தெரிகிறது.

பாலாஜி
 

`எவிக்‌ஷன் பட்டியலில் ஐஷ்வர்யா இருப்பதால், பிக் பாஸ் கரிசனம் காட்டியிருக்கிறார்’ என்று நெட்டிசன்ஸ் கலாய்க்கத் தொடங்கிவிட்டனர். இன்று, விஜய் டி.வி வெளியிட்டுள்ள ப்ரோமோவில் ஜனனி, பாலாஜியிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார்.  ‘நான் இந்த வாரம் எவிக்‌ஷனில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்றால், நீங்கள் மொட்டை அடித்துக்கொள்ள வேண்டுமாம். உங்களை நான் மொட்டை அடித்துக்கொள்ளும்படி சம்மதிக்க வைக்க வேண்டுமாம். இது பிக் பாஸின் உத்தரவு’ என்கிறார்.

பாலாஜி

சற்றுநேரம் யோசித்த பாலாஜி இதற்கு சம்மதிக்கிறார். ‘என் பொண்ணுக்காக மொட்டை போட்டுக்குறேன்னு நெனச்சு இதப் பண்றேன்’ என்று கேமரா முன் வந்து பிக் பாஸிடம் சம்மதம் தெரிவிக்கிறார் பாலாஜி. பின்னர், பாலாஜிக்கு மும்தாஜ் மொட்டை அடிக்கிறார். ஜனனி நெகிழ்ந்துபோய் கண்ணீர்விடுகிறார். இதுதான் இன்றைய ப்ரோமோ. 

ஐஸ்வர்யா
 

மற்றொரு ப்ரோமோவில், தலையில் எண்ணெய் தேய்த்துக்கொண்டு சென்றாயன் அமர்ந்திருக்கிறார். அவரிடம் ஐஷ்வர்யா  எதையோ சொல்ல முயல்கிறார். அப்படியே விஜயலட்சுமிக்கும் ஐஷ்வர்யாவுக்குக் இடையே சண்டை முட்டிக்கொள்கிறது. ஐஷ்வர்யா எவிக்‌ஷனில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்றால், சென்றாயன் மொட்டை அடித்துக்கொள்ள வேண்டும் என்று பிக் பாஸ் ட்விஸ்ட் வைத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க