கந்தல் துணியுடன் கண்ணீர் ததும்பும் அமலாபால் - `ஆடை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் | Amala paul's Aadai movie first look poster has been released

வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (04/09/2018)

கடைசி தொடர்பு:22:06 (04/09/2018)

கந்தல் துணியுடன் கண்ணீர் ததும்பும் அமலாபால் - `ஆடை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

மேயாத மான் பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள ஆடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியாகியுள்ளது. 

அமலா பால்

வைபவ், ப்ரியா பவானி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மேயாத மான். அந்தப் படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரத்னகுமார் இயக்கியிருந்தார். அவருடைய இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள படம் `ஆடை’. அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. அதை இயக்குநர் வெங்கட் பிரபு, அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அந்தப் போஸ்டரில், 'வெள்ளை நிற கந்தல் துணியில், அழுதுத் துடிக்கும் அமலா பாலின் கண்களில் கண்ணீர் வழிகின்றன'. அந்தப் போஸ்டரில் இதுவரையில் பார்த்திராத அமலா பால், அழுதுகொண்டிருக்கிறார். இந்தப் படத்துக்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.