``இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு; விட்டலாச்சாரி கதை மாதிரி இல்ல” - 'காட்டேரி' பட டீசர்!

இயக்குநர் டீகே இயக்கி, வைபவ், வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ள 'காட்டேரி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

காட்டேரி

'யாமிருக்க பயமேன்', 'கவலை வேண்டாம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து, இயக்குநர் டி.கே இயக்கியிருக்கும் படம், 'காட்டேரி'. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம், காமெடி கலந்த த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்கு விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.என்.பிரசாத் இசையமைத்துள்ளார்.  வைபவ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், சோனம் பாஜ்வா ஆகிய 3 நாயகிகள் நடித்துள்ளனர். மேலும், தெலுங்கு ஹீரோயின் மணலி ரத்தோட் இந்தப் படத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!