தமிழகத்தின் முதல் பலகுரல் மன்னன் ராக்கெட் ராமநாதன் காலமானார்!

தமிழகத்தின் முதல் பலகுரல் மன்னனும், திரைப்பட நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்.

ராக்கெட் ராமநாதன்

தமிழகத்தின் முதல் பலகுரல் மன்னனும் நகைச்சுவை  நடிகருமான ராக்கெட் ராமநாதன் ஒருபுல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது, ஸ்பரிசம், வளர்த்தகடா, மண்சோறு, கோயில்யானை, நாம், வரம் உட்பட ஏராளமான படங்களில் இவர் நடித்துள்ளார். ரஜினியின் ஆரம்பக்கால நண்பரான இவர் தமிழக அரசின் கலைமாமணி, நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் விருதுகள் பெற்றவர். 

74 வயதாகும் இவர் சமீபகாலமாக நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். தன் இறுதி நால்களில் குடும்பத்தினரைக்கூட அடையாளம் கொள்ளமுடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்டிருந்தார். இதற்காகச் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனளிக்காமல்  காலமானார். அவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவரின் உடல் இன்று மாலை 4.30 மணியளவில் நல்லடக்கம் நடைபெறுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!