வெளியிடப்பட்ட நேரம்: 18:58 (06/09/2018)

கடைசி தொடர்பு:18:58 (06/09/2018)

`` `அஜய்கிட்ட இருந்து நிறைய கத்துக்கோ’ன்னு எங்க அம்மா சொன்னாங்க" - அனுராக் காஷ்யப் 

`டிமான்டி காலனி' படத்தைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா, ராஷி கண்ணா ஆகியோர் நடித்து வெளிவந்துள்ள 'இமைக்கா நொடிகள்' படத்தின் சக்சஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது.

அனுராக் காஷ்யப்

அப்போது பேசிய அனுராக் காஷ்யப், "ருத்ராவுக்கு கிடைச்ச எல்லா பெருமையும் அஜய்க்குதான் போகணும். என்கிட்ட கதை சொல்ல வரும்போது முருகதாஸை கால் பண்ணி பேச வெச்சு என்னை எமோஷனல் ப்ளாக் மெயில் பண்ணிட்டார். நிறைய தடங்கலுக்குப் பிறகு, இந்தப் படம் வெளிவந்திருக்கு. மகிழ் திருமேனியின் மேஜிக் குரல்தான் என் கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கு. 'அஜய்கிட்ட இருந்து நிறைய கத்துக்கோ'ன்னு எங்க அம்மா சொன்னாங்க. அந்தளவுக்கு சினிமா ஆர்வமும் அறிவும் அஜய்கிட்ட இருக்கு. இந்தப் படத்துல நான் நிறைய விஷயங்கள் கத்துக்க முடிஞ்சுது. இந்தளவுக்கு என் மீது அன்பும் ஆதரவும் கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கலை. ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றார். மேலும், 'இமைக்கா நொடிகள்' படத்தில் நடித்த நடிகர்கள், டெக்னீஷியன்கள், அன்புச்செழியன், அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க