Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்

•  'மங்காத்தா’வில் அஜீத்துக்கு ஜோடியாக சேரிப் பெண் வேடத்தில் நடிக்கிறார் த்ரிஷா. சென்னையில் மிகப் பெரிய குப்பம் செட் போட்டு ஷூட்டிங் நடத்தி வருகிறார்கள். சொந்தக் குரலில் சென்னை செந்தமிழ் பேசிக் கலக்கி இருக்கிறாராம் த்ரிஷ். சென்னை தாண்டி வருவாயா?

•  சச்சினுக்கும் டோனிக்கும்தான் இந்த ஆண்டு உலகக் கோப்பையின்போது விளம்பரங்களில் போட்டா போட்டி. பெப்ஸிக்கு டோனியும், எதிர் பார்ட்டி கோகோ கோலாவுக்கு சச்சினும் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.  கூல்ல்ல்ல்ல்!

இன்பாக்ஸ்

• அமீர் கான், சல்மான் கானுக்கு அடுத்தபடியாக பாலிவுட்டில் ஷாரூக் கானுக்கு ஜோடியாகிறார் அசின். சேத்தன் பகத்தின் '2 ஸ்டேட்ஸ்’ நாவலைத் தழுவி எடுக்கப்படும் படத்தில் முதலில் பிரியங்கா சோப்ரா நடிப்பதாக இருந்தது. ஆனால், 'தமிழ் பெண் ரோலுக்கு அசின்தான் பொருத்தம்!’ என்று அசினை டிக் அடித்திருக்கிறார் ஷாரூக் கான். சென்னை செந்தமிழ் கத்துக்கோ கண்ணு!

இன்பாக்ஸ்

•  ராணி முகர்ஜியும், வித்யா பாலனும் இணைந்து நடித்த 'No one killed Jessica’ படப்பிடிப்பில், இருவருக்கும் சண்டை என்று செய்தி. 'அவை உண்மை இல்லை’ என்று நிரூபிக்க, கடந்த வாரம் டி.வி ஷோ ஒன்றில் கலந்துகொண்டார்கள் இருவரும். தங்கள் நட்பின் ஆழத்தை நிரூபிக்க, ராணியும் வித்யாவும் உதட்டோடு உதடு அழுத்தி 'பச்சக்’கென்று கொடுத்துக்கொண்டதில், மிரண்டுகிடக்கிறது பாலிவுட். பப்ளிக்குட்டிக்கு வானமே எல்லை!

இன்பாக்ஸ்

• ஏ.ஆர்.ரஹ்மானின் புத்தாண்டு சபதம்? 2011 முழுவதும் ரெஸ்ட்! 'ஓய்வுக் காலம் முழுக்க, குடும்பத்துக்காகவும் எனது கே.எம் இசைக் கல்லூரிக்காகவும் செலவிடப் போகிறேன்!’ என்று அறிவித்திருக்கிறார் ரஹ்மான். புயலுக்குப் பின் அமைதி!

இன்பாக்ஸ்

• தமிழ் நாவல் வரலாற்றில் முதல்முறையாக நோய்மையுறுவதைப்பற்றி 530 பக்கங்களில் 'துயில்’ எனும் புத்தம் புதிய நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். 'மனிதர்கள் எப்போதும் நோயைப் பாவம் என்று நினைக்கிறார்கள். உண்மையில் நோய் ஓர் ஆசான். யார் நம்மீது அக்கறை கொள்கிறார்கள் என்பதை நோயே அடையாளம் காட்டுகிறது. உடலை அறிந்துகொள்ள நாம் தவறும்போது, நோய் அதைச் சுட்டிக் காட்டுகிறது!’ என்று விளக்கம் கொடுக்கும் எஸ்.ராமகிருஷ்ணன் 'துயில்’ நாவலை எழுதுவதற்கு மூன்று ஆண்டுகள் செலவழித்து இருக்கிறார். நாவல் உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடு. ஆரோக்கிய சாதனை படைக்கட்டும்!

இன்பாக்ஸ்

• மும்பையின் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோயில் அருகில் 16 கோடி ரூபாய்க்கு நான்கு பெட்ரூம் ஃப்ளாட் வாங்கியிருக்கிறார் தீபிகா படுகோன். 'என் பெயரில் வாங்கப்பட்டு இருக்கும் முதல் சொத்து!’ என்பது தீபிகாவின் பூரிப்பு. ஆனால், பாலிவுட் மீடியாக்களோ 'இது சித்தார்த் மல்லையாவின் 'அன்புப் பரிசு’ என்று கிசுகிசு கிளப்பிக்கொண்டு இருக்கிறது. மல்லையா ஃபேமிலி அன்புக்கு ஏதய்யா எல்லை?

இன்பாக்ஸ்

• அன்னா சாப்மேன்... அமெரிக்காவில் பிடிபட்ட ரஷ்ய உளவாளி. ரஷ்யாவின் '2010-ன் சிறந்த பெண்மணி’ ஆகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அதோடு, ஜனவரி மாத 'ப்ளேபாய்’ பத்திரிகையின் அட்டை மற்றும் நடுப்பக்கத்தை அலங்கரிக்கப் போவது இந்த 'ஸ்பைஸி கேர்ள்’ தான். கன்னா பின்னா அன்னா!

இன்பாக்ஸ்
##~##

• ஜூன் மாதம்தான் அதிகாரபூர்வ விவாகரத்து என்றாலும், இப்போதே பரபரப்பாகத் திருமண ஏற்பாடுகளில் இறங்கி விட்டார் பிரபுதேவா. நயன்தாராவின் ஃபேவரைட் 'பூங்கா’ ஹோட்டலில்தான் திருமணமாம். 'நிகழ்வும் மங்களகரமான’ நிகழ்வுக்கென தங்க ஜரிகையால் நெய்யப்பட்ட பட்டுப்புடவை காஞ்சிபுரத்தில் தயார் ஆகிக்கொண்டு இருக்கிறது. அதற்கு முன் நெருக்கமான சினிமா நட்சத்திரங்களுடன் ஐதராபாத்தில் 'பேச்சுலர் பார்ட்டி’ கொண்டாடத் திட்டமாம். குடி குடித்தனம் ஆரம்பம்!

• விக்கிலீக்ஸ் அசாஞ்சேவின் அடுத்த அட்டாக்? அவரேதான். ஒரு மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் சுயசரிதை எழுதுகிறார் ஜூலியன் அசாஞ்சே. விக்கிலீக்ஸ் தளத்தைத் தொடர்ந்து நடத்தவும், தனது வழக்கு செலவுகளுக்காகவும் இந்தத் தொகை உதவும் என்பதால், சம்மதித்திருக்கிறார் அசாஞ்சே. அஞ்சாதே அசாஞ்சே!

• கடந்த நான்கு ஆண்டுகளாக முதல்வர் கருணாநிதியின் படம் தாங்கி பல அரசுத் துறைகளின் காலண்டர்கள் வெளியாகின. ஆனால், இந்த ஆண்டு குடிநீர் வடிகால் வாரியம் முதற்கொண்டு பல துறைகள் 2011 காலண்டர் வெளியிடவே இல்லை. 'ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்?’ என்ற கேள்விக்குப் பதில் தெரியாமல் கருணாநிதி பட காலண்டரை வெளியிடும் தயக்கமே அதற்குக் காரணம். ஆடி போய் ஆவணி வந்தா டாப்பு... ஐயா போய் அம்மா வந்தா ஆப்பு!