மிஷ்கின் - உதயநிதி காம்போவில் `சைக்கோ' படப்பிடிப்பு ஆரம்பம்!

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துவரும் படம் 'கண்ணே கலைமானே'. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து வெளிவரத் தயாராகவுள்ளது. இந்த நிலையில், விஷால் நடிப்பில் `துப்பறிவாளன்' படத்தை இயக்கிய மிஷ்கின், தனது அடுத்தபடத்தை த்ரில்லர் ஜானரில் உருவாக்கத்திட்டமிட்டு, அதற்கு உதயநிதியை கதாநாயகன் ஆக்கியுள்ளார். இப்படத்துக்கு 'சைக்கோ' என்று பெயரிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் தயாராகவிருக்கும் இப்படத்தில் நித்யாமேனன், அதிதி ராவ் ஹைதரி கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர். 

சைக்கோ

இவர்கள் தவிர 'சவரக்கத்தி' படத்தில் கதாநாயகனாக நடித்த இயக்குநர் ராம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் உதயநிதி பார்வையிழந்த மாற்றுத் திறனாளியாக நடிக்கவுள்ளார். பி.சி.ஶ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு, இளையராஜா இசையமைக்கவிருக்கிறார். டபுள் மீனிங் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. 

உதய்நிதி

படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆரம்பம் ஆகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின், மிஷ்கின், பி.சி.ஶ்ரீராம், இளையராஜா என அமைந்துள்ள இந்தப் புதிய கூட்டணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!