`குழப்பம், சங்கடம் ஏற்படும்!' - அறிவிப்போடு நின்றுபோன `பாப்புலர் ஃபிலிம்’ ஆஸ்கார் விருது!

‘பிரபலமான படம்’ என்ற புதிய பிரிவு ஏற்படுத்தும் முடிவு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆஸ்கார் குழு தெரிவித்துள்ளது.

விருது

‘ஆஸ்கார் விருதுகள்’ திரைத்துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும். தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களைக் கட்டிப்போடும் முதன்மையான விருது வழங்கும் விழா. 91-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா, 2019-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழாவில், ‘பிரபலமான படங்கள்’ (Popular film) என்ற புதிய பிரிவை உருவாக்கி விருது வழங்க திட்டமிட்டிருந்தனர். இதற்குப் பொதுமக்கள் மற்றும் கலைத்துறையினர் மத்தியில் இருந்து ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் வந்தன. இதுகுறித்து விருது வழங்கும் நிறுவனம் தரப்பில் கடந்த மாதம் அறிக்கை ஒன்று வெளியானது. அதில், மக்கள் மத்தியில் பிரபலமான படங்களுக்கே இந்த விருது வழங்கப்படும். தேர்வுக்குழு இந்த விருதை தேர்ந்தெடுக்காது’ எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த விருது குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் இதில் பல்வேறு சங்கடங்கள் இருப்பதாக திரைத்துறையினர் தொடர்ந்து கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் ‘பிரபலமான படங்கள்’ என்ற புதிய பிரிவு ஏற்படுத்தும் முடிவை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆஸ்கார் குழு தெரிவித்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து இந்த ஆஸ்கார் விருது வழங்கும் விழாவை நேரலையில் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே பாப்புலர் ஃபிலிம்ஸ் என்னும் பிரிவைக் கொண்டுவந்தனர் என்றும் கூறுகின்றனர் ஒரு தரப்பினர். தற்போது இந்த விருது வழங்கப்படாமலே தற்காலிகமாக நிறுத்தப்பட்டுவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!