வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (08/09/2018)

கடைசி தொடர்பு:05:00 (08/09/2018)

`காடும், மலையும் மனுஷருக்கு வேண்டியே' - மிரட்டும் ஃபஹத் பாசிலின் `வரதன்' டிரைலர்!

மலையாள சினிமாவின் பிரபல இயக்குநர் அமல் நீரத்துடன் மூன்றாவது முறையாகக் கைகோத்துள்ளார் நஸ்ரியாவின் கணவர் ஃபஹத் பாசில். 

ஃப

இப்படத்துக்கு, `வரதன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஃபஹத்துக்கு ஜோடியாக மாயாநதி புகழ் ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். அவருடன் ஜினு ஜோசப் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில், நஸ்ரியா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். தயாரிப்பாளர் அவதாரத்துடன், தன் கணவருக்காக பாடகியாகவும் மாறியுள்ளார். 

சுசின் ஷியாம் இசையில் நஸ்ரியா பாடிய `புதியொரு பாதையில்' எனத் தொடங்கும் பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியாகி, யூ டியூபில் ஹிட்டடித்தது. இந்த நிலையில், படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. படம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. டிரைலரில் பின்னணி இசை, காட்சி அமைப்புகள் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்கிறது. கார்பன் படம் தோல்வியடைந்த நிலையில் வரதன் படத்தின் ஹிட்டை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார் ஃபஹத்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க