வெளியிடப்பட்ட நேரம்: 19:44 (10/09/2018)

கடைசி தொடர்பு:19:49 (10/09/2018)

`பீருக்குப் பதில் மோர்; அதே தீம் மியூஸிக்!’ - சாமி - 2 படத்தின் இரண்டாவது டிரெய்லர்

ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள `சாமி 2' படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

2003-ம் ஆண்டில் நடிகர் விக்ரம் இயக்குநர் ஹரி காம்பினேஷனில் வெளியான ஆக்‌ஷன் திரைப்படம் சாமி. விக்ரம், த்ரிஷா, விவேக், ரமேஷ் கண்ணா எனப் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்த இந்தத் திரைப்படம் மிகப் பெரிய ஹிட் ஆனது. இதைத் தொடர்ந்து கடந்த வருடம் சாமி-2 படத்தை இயக்கப் போவதாக இயக்குநர் ஹரி அறிவித்திருந்தார். அதன்படி இதற்கான சூட்டிங் வேலைகளும் மிக வேகமாக தொடங்கி நடைபெற்று வந்தன. அவ்வப்போது இப்படத்தின் சூட்டிங் புகைப்படங்கள் வெளியாகி இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வந்தது. இந்த நிலையில், இன்று சாமி-2 படத்தின், இரண்டாவது டிரெய்லர்  வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் ஹரியின் அக்மார்க் ஆக்‌ஷன் காட்சிகளோடு விறுவிறுப்பான காட்சிகள் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்தில் வில்லனாக பாபி சிம்ஹா நடித்திருக்கிறார். படம் இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.