பள்ளிக்கூட மாணவி ஃப்ளாஷ்பேக்குடன் சித்ரா ‘ரீ எண்ட்ரி’!

'ரொம்ப வருஷத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நடிக்கிறேன்' என்கிறபோதே சித்ராவின் முகம் மலர்கிறது.

ஆம், 22 ஆண்டுகளுக்குப் பிறகு 'என் சங்கத்து ஆள அடிச்சவன் எவண்டா' என்கிற படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி ஆகிறார் சித்ரா. படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் முடிவடைந்துள்ள நிலையில் அவரிடம் பேசினோம்.

சித்ரா

''கோபாலா கோபாலா'ங்கிற படத்துல கடைசியா நடிச்சேன். பிறகு, உடல்நலமில்லாத அப்பாவை கவனிக்கறதுக்காக பிரேக் விட்டவ, அப்படியே குடும்பம், மகள் படிப்புன்னு நேரத்தை ஒதுக்கத் தொடங்கிட்டேன். இடையில சிலர் நடிக்கக் கேட்டு வந்தாங்க. கதைகள் திருப்தியா அமையாததால கமிட் ஆகலை. இந்தக் கதை பிடிச்சதோட, வீட்டுல பெர்சனல் கமிட்மென்டுகளும் குறைஞ்சிட்டதால, இப்ப ஓகே சொன்னேன். ரொம்ப நாளைக்குப் பிறகு ஷூட்டிங் கிளம்பிப் போன அந்த முதல் நாள், ரொம்பவே சிலிர்ப்பா இருந்தது. கேமரா உள்ளிட்ட சினிமா கருவிகளையெல்லாம் ஒரு நிமிஷம் அப்படியே தொட்டுப் பார்த்தேன். ரொம்ப நாளா பிரிஞ்சிருந்தவங்களைச் சந்திச்ச மாதிரி அப்படியொரு ஃபீலிங். வார்த்தைகளால விவரிக்க இயலாத ஒரு அனுபவம் அது'' என்கிறார் சித்ரா.

'நாகர்கோவிலில் ஷூட்டிங் நடத்தினோம். படத்துல டெல்லி கணேஷ் சார் ஜோடியா நடிக்கிறாங்க. ஃப்ளாஷ்பேக்ல அவங்களை பள்ளிக்கூட மாணவியாகூட காட்டியிருக்கோம்' என்கிறார், படத்தின் இயக்குநர் மணிகண்டன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!