லக்னோவில் ரஜினி -விஜய்சேதுபதி! `பேட்ட' அப்டேட்

`காலா' படத்துக்குப் பிறகு, ரஜினி நடிக்கும் புதிய படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு சிம்லா, டார்ஜிலிங் பகுதிகளில் ஆரம்பமானது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா நடிக்கின்றனர். இது தவிர பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக் நடிக்கிறார்.  இந்தப் படத்துக்கு `பேட்ட' எனப் பெயரிடப்பட்டு சமீபத்தில் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. 

பேட்ட

இதற்கிடையே, கடந்த 6-ம் தேதி  `பேட்ட' படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்காக லக்னோ புறப்பட்டுப் போனார் ரஜினி. அங்கே ஒரு மாதம் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ரஜினி, விஜய்சேதுபதி, திரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். டார்ஜிலிங்கில் படப்பிடிப்பு நடந்தபோது  தினசரி ஷூட்டிங்கில் கலந்துகொண்டு நடித்த பாபிசிம்ஹா, மேகா ஆகாஷ்  லக்னோ ஷூட்டிங்கில் மிஸ்ஸிங். வழக்கமாக அமிதாப் பச்சன் படத்தின் படப்பிடிப்பில் ஐந்து தயாரிப்பு நிர்வாகிகள் வேலை பார்ப்பார்கள். இதுவரை இந்திய சினிமாவில் இல்லாத அளவுக்கு  `பேட்ட' படத்துக்காக பத்துக்கும் மேற்பட்ட புரொடக்‌ஷன் மேனேஜர்களை நியமித்து பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது சன்பிக்சர்ஸ். டார்ஜிலிங்கில் கடுங்குளிரில் இரவு நேரத்தில் சண்டைக்காட்சியில் கலந்து கொண்டு நடித்தார், ரஜினி. அதேபோல் லக்னோவில் நேற்று இரவு படப்பிடிப்பில் ரஜினியும், விஜய்சேதுபதி மோதும் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன. இருவரும் மோதும் காட்சியை இதுவரை யாரும் அமைக்காத அளவுக்கு பிரமாதமாக அமைத்து படப்பிடிப்பு குழுவினரைக் கைதட்ட வைத்திருக்கிறார் ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர்ஹெய்ன். தொடர்ந்து அங்குப் படப்பிடிப்புகள் நடைபெறவுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!