வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (12/09/2018)

கடைசி தொடர்பு:17:09 (13/09/2018)

`பரோட்டா சூரி... இனி சிக்ஸ் பேக் சூரி!’

கடந்த 8 மாத உழைப்புக்குப் பின், தன் உடலமைப்பை மாற்றியுள்ளார் நடிகர் சூரி. சிக்ஸ் பேக்கில் காட்சியளிக்கும், அவரது புதிய தோற்றத்தை நடிகர் சிவகார்த்திகேயன், தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சிக்ஸ்பேக் சூரி

திரையுலகில் `சூரி’ என்ற பெயரில் காலடியெடுத்து வைத்து, வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி மூலம், பிரபலமானவர் `பரோட்டா’ சூரி. சந்தானம் கதாநாயகனாகப் பரிமாணமெடுத்தபோது, அவரது இடத்தை தன் குணச்சித்திர நடிப்பால் நிரப்பியவர். தமிழில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருடன் நடித்து, தனக்கெனப் புதிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதிலும், சிவகார்த்திகேயன் - சூரி கூட்டணிக்குத் தனி ரசிகர்களே உண்டு.

அந்த வகையில் சிக்ஸ்பேக்குடன் நடிகர் சூரி நின்றுகொண்டிருப்பது போன்றதொரு புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ``இது நம்ப சிக்ஸ்பேக் சூரி. 8 மாத கால, கடின உழைப்பு இது. இந்தப் புகைப்படத்தை ஷேர் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். சூரியின் இந்தப் புதிய அவதாரம், அவரின் ரசிகர்களை, உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் இந்தப் புகைப்படத்தை, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் - சூரி காம்போவில் `சீமராஜா’ படம் நாளை வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.