விரட்டும் செல்போன்கள்... மிரட்டும் கழுகு... சிட்டி ரீ-என்ட்ரி! - ரஜினியின் 2.0 டீசர்

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

2.0 டீசர்


ஷங்கர் - ரஜினி கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது 2.0 திரைப்படம். 2010-ம் ஆண்டு வெளியான, எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிவரும் இந்தப் படத்துக்கு உலக அளவில் எதிர்பார்ப்புக் கூடியிருக்கிறது. முழுக்க முழுக்க 3டி கேமராவைப் பயன்படுத்தி 2.0 படம் படமாக்கப்பட்டுள்ளது. கிராஃபிக்ஸ் வேலைகள் காரணமாகப் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. ரஜினி, அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம், வரும் நவம்பர் 29-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
2016-ம் ஆண்டு தொடங்கிய படத்தின் வேலைகள், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ம் தேதி பிரமாண்டமாக நடத்தப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3,000-த்துக்கும் மேற்பட்ட கலைஞர்களின் உழைப்பில் 2.0 படம் உருப்பெற்றிருக்கிறது. 

இந்தநிலையில், படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. 3டியில் வெளியிடப்பட்டுள்ள இந்த டீசரை திரையரங்குகளில் இலவசமாக மக்கள் கண்டுகளிக்கலாம் என்று படக்குழுவினர் ஏற்கெனவே அறிவித்திருந்தனர். நாடு முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட 3டி வசதி கொண்ட திரையரங்குகளில், 5,000-த்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 2டி வெர்ஷனிலும் டீசர் வெளியிடப்பட்டுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்திருக்கிறது. அதேபோல், யூடியூபிலும் டீசர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.  

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!