பாடுவதில் ஆர்வமுடையவரா நீங்கள்? - இதோ ஏ.ஆர்.ரஹ்மான் தரும் அற்புத வாய்ப்பு!

``நட்சத்திர பாடகரை தேடிக்கொண்டிருக்கிறேன்; அது நீங்கள் என்றால் உங்களுக்கான வாய்ப்பு இது” என இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்  தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது லிங்கை பயன்படுத்தி பலர், தங்கள் விவரங்களை அனுப்பி வருகின்றனர்.

ஆஸ்கார் நாயகன், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவுக்கு இசையமைப்பதையும் தாண்டி, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, இசைப்பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அதே போல, இசை மற்றும் பாடுவதில் ஆர்வமுடையவர்களுக்கு, அவ்வப்போது, வாய்ப்பளித்து வருகிறார். அந்த வகையில், தற்போது, புதிய அறிவிப்பொன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, அவர்தனது ட்விட்டர் பக்கத்தில், ``உங்களிடம் இசைக்கான பேரார்வம் உள்ளதா? அப்படியானால், நீங்கள்  ஸ்டேஜ் ஏற, இதுவே சரியான தருணம். நான் நல்லதொரு நட்சத்திர பாடகரை தேடிக்கொண்டிருக்கிறேன்; அது நீங்கள் என்றால், உங்கள் விவரங்களை இங்கே தெரிவிக்கவும்” என லிங்கை பதிவிட்டுள்ளார். யூடிப்புடன் இணைந்து இத்தகைய முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளார். தங்களுக்குக் கிடைத்த நல்லதொரு வாய்ப்பாக எண்ணி பலரும், தங்கள் தகவல்களை இதில் பதிவிட்டு வருகின்றனர்.  நீங்களும் அதில் ஒருவர் என்றால் ஏன் தாமதம்? 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!